Chiyaan Vikram : தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தமிழ் சினிமாவில் கமலுக்கு அப்புறம் எந்த ஒரு ரோல் கொடுத்தாலும் சூப்பராக செய்து அசத்தக்கூடிய நடிகர் என்கிற பெருமையை பெற்றவர் என்றால் அது சியான் விக்ரம் தான். அவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் விக்ரம். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இப்படம் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...நடிகர் விஜய்யின் வீட்டு முன் ஜொலிக்கும் தேசியக்கொடி மின் அலங்காரம்

Scroll to load tweet…

அதேபோல் விக்ரம் கைவசம் உள்ள மற்றொரு படம் கோப்ரா, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது கெட் அப்பை பார்த்து யாரும் மாறுவேஷம் என நினைத்துவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விக்ரம், அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் தான் நடிக்க உள்ள படத்தின் கெட்-அப் தான் அது என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்...என்ன கொடுமை இது... நயன்தாரா கெட்அப்பில் போட்டோ போட்ட பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து விக்கி இப்படி சொல்லிட்டாரே..!