நடிகர் விஜய்யின் வீட்டு முன் ஜொலிக்கும் தேசியக்கொடி மின் அலங்காரம்
நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பலரும் பின்பற்றி வருகின்றனர். பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த், தனது வீட்டு வாசலில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிலையில், நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது. நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள தெருவின் முனையில் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அதிதி ‘ஐ லவ் யூ’... இயக்குனர் ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்
அதுகுறித்து புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தான் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளாரா அல்லது வேறு யாராவது இவ்வாறு அலங்காரம் செய்துள்ளார்களா என்பது பற்றி தெரியவில்லை. இருப்பினும் விஜய் வீடு அருகே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... என்ன கொடுமை இது... நயன்தாரா கெட்அப்பில் போட்டோ போட்ட பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து விக்கி இப்படி சொல்லிட்டாரே..!