என்ன கொடுமை இது... நயன்தாரா கெட்அப்பில் போட்டோ போட்ட பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து விக்கி இப்படி சொல்லிட்டாரே..!
Vignesh shivan : நடிகை நயன்தாராவின் திருமண உடைபோல் உடையணிந்து போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கமெண்ட் செய்திருந்தார்.
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த சேலை மற்றும் அணிகலன்களும் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய நடிகை ஆர்த்தி, நடிகை நயன்தாராவின் திருமண உடைபோல் தானும் உடையணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் வீட்டு முன் ஜொலிக்கும் தேசியக்கொடி மின் அலங்காரம்
அந்த புகைப்படத்தை நயன்தாராவின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு, டுவிட்டரில் பதிவிட்ட ஆர்த்தி, “என்ன கொடுமை இது” என அவரே அவரை கிண்டலடித்து பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆனதை அடுத்து, நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ஆர்த்தியின் பதிவை பார்த்ததும் “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டியர் ஆர்த்தி” என பதிவிட்டு இருந்தார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஒரு வேளை விக்கி போனில் இருந்து நயன்தாரா இவ்வாறு பதிவிட்டிருப்பாரோ என சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தற்போது ஹனிமூன் கொண்டாட்டத்துக்காக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா... முதல் நாளிலேயே அந்த படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல் - பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் விருமன்