dhoni: இந்தியராக இருப்பதில் ஆசிர்வதிக்கப்பட்டவன்: தோனியின் இன்ஸ்டாகிராமில் profile picture-ஆக தேசியக் கொடி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமாகிய எம்எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பிட்சராக தேசியக் கொடியை வைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமாகிய எம்எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பிட்சராக தேசியக் கொடியை வைத்துள்ளார்.
நாடு 75-வது சுதந்திரத்தினத்தை வரும் 15ம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் தோனியும் அதற்கு ஆயத்தாமாகி தனது ப்ரொபைல் படத்தை மாற்றி தேசியக் கொடியை வைத்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாட மத்திய அரசு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வீடு தோறும் இன்று முதல் 15ம் தேதிவரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டார்.அது மட்டுமல்லாமல் அனைவரும் தங்களின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் டிபி, ப்ரொபைல் படத்தில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி ஏராளமான பிரபலங்கள் 75-வது சுதந்திரதினத்தைக்கொண்டாடும் வகையில் தங்களின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் டிபி, ப்ரொபைல் படத்தை மாற்றி வருகிறார்கள். அந்த வகையில் எம்எஸ் தோனியும் தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் படத்தை மாற்றியுள்ளார். தோனியின் ப்ரொபைல் படத்தில் “ நான் இந்தியராகப் பிறக்க ஆசிர்வரித்கப்பட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தியக் கேப்டனாக தோனி இருந்தபோதே, ராணுவத்தில் கவுரவஅதிகாரியாக நியமிக்கப்ட்டார். பல்வேறு தருணங்களில் தனக்கு கிடைக்கும் ஓய்வு காலத்தை ராணுவத்தில் சிறிய பயிற்சிக்காக தோனி செலவிட்டுள்ளார். இந்திய எல்லைப்புற படையில் லெப்டினென்ட் கர்னலாக தோனி இருந்து வருகிறார். இந்தப் பிரிவில் ஜம்மு காஷ்மீர் பிரிவில் பாரா ரெஜிமென்டில் தோனி பயிற்சியும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் தோனி தனது ப்ரொபைல் படத்தை அடிக்கடி மாற்றாதவர். ஆனால், சுதந்திரதினத்தையொட்டி தோனி தனது ப்ரொபைல் படத்தை மாற்றியுள்ளது ரசிகர்களை ஈர்க்க்கும். இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தோனிக்கு லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் உள்ளனர். தோனியின் செயலைப் பார்த்து இனிமேல் அவர்களும் தங்கள் ப்ரொபைல் படத்தை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.