- Home
- Cinema
- உதயநிதி வெளியிட்ட முதல் இந்தி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ‘லால் சிங் சத்தா’
உதயநிதி வெளியிட்ட முதல் இந்தி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ‘லால் சிங் சத்தா’
உதயநிதி வெளியிட்ட லால் சிங் சத்தா படம் ரிலீசானதில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அப்படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

அட்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடித்த படம் லால் சிங் சத்தா. தி பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் ரீமேக்காக உருவாக்கப்பட்ட இப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்திருந்தார். மேலும் அமீர்கானின் நண்பன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்திருந்தார். இதில் இருவரும் ராணுவ வீரர்களாக நடித்திருந்தனர்.
இந்தியில் உருவான லால் சிங் சத்தா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக கடந்த ஆகஸ்ட் 11ந் தேதி உலகம் முழுவதும் வெளியிட்டனர். தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. அந்நிறுவனம் வெளியிட்ட முதல் இந்தி படம் இதுவாகும்.
பல ஆண்டுகளாக இந்தி எதிர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு கட்சியில் இருந்துகொண்டே இந்தி படத்தை வெளியிடலாமா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த உதயநிதி, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோமே தவிர, இந்தி கற்றுக்கொள்ளக் கூடாது என ஒருபோதும் சொன்னதில்லை எனக் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு தாவிய லாஸ்லியா.... திடீரென கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள்
இந்நிலையில், லால் சிங் சத்தா படம் ரிலீசானதில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் முதல் நாளை விட அப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் மரண அடி வாங்கி உள்ளது. அதன்படி முதல் நாளில் உலகமெங்கும் ரூ.12 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நாளோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் குறைவான வசூல் ஆகும்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உதயநிதி வெளியிட்ட முதல் இந்தி படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என பதிவிட்டு வருகின்றனர். இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் லால் சிங் சத்தா படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என படக்குழு எதிர்பார்த்து வருகிறது. இருப்பினும் வசூல் கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.
இதையும் படியுங்கள்... Viruman : பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் விருமன்... இரண்டாம் நாளிலும் இம்புட்டு வசூலா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.