‘குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார் சீமான்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பை ஏன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் எடுக்கவில்லை. குடிவாரி கணக்கெடுப்பை எடுங்கள், இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !

குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல், உள்ளிட்டவைகளை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது, அதனால், அவர்கள் இதை எடுப்பதில்லை. குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்க பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் இடஒதுக்கீடு. எது உண்மையான சமூக நீதி என்று தெரியவில்லை. சமூகத்துக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான நீதி வழங்குவது தான் சமூக நீதி. குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு..அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

Scroll to load tweet…

சமூக நீதியை பேசிய இந்த மாநிலத்தில் இதுவரை எடுக்கவில்லை. சமூக நீதியை பேசாத பீகார் மாநிலத்தில் எடுத்து வருகிறார்கள். தனியார்மயப்படுத்துவதில் இட ஒதுக்கீடு பயன்தராது என்றும் தெரிவித்துள்ளார்.இந்த பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் வரிசையாக கேள்வி கேட்க, இதனால் கோபமடைந்தார் சீமான். அப்போது சீமான் செய்தியாளரை, டே மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்’ என்று திட்டியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி