பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு..போலீஸ் எடுத்த அதிரடி முடிவு - அண்ணாமலை சொன்ன அதிர்ச்சி தகவல்
காரில் ஏறி புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலுள்ள ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள தும்மங்குண்டு அஞ்சல் புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் விமான மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
அப்போது அஞ்சலி செலுத்துவதில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிறகு காரில் ஏறி புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார். சிலர் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் கார் தாக்கிய வழக்கில் பாஜக சார்பில் கைது செய்யப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் ஆகிய ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் துணைத்தலைவர் மனோகரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘நான் வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை. தொண்டர்கள் யாருக்கும் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப் போவதும் கிடையாது. நமது கட்சி ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக் கூடிய கட்சி பாஜக’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !