இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், கரூர் விவகாரம், முதல்வர் ஸ்டாலின், கடும் உறைபனி, தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:49 AM (IST) Dec 27
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,04,000-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,74,000-க்கும் விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
09:48 AM (IST) Dec 27
வங்கதேசத்தில் நடப்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், அதை விமர்சிப்பவர்கள் இங்கு கும்பல் படுகொலைகள் நடக்கும்போது அமைதியாக இருக்கிறார்கள்.
09:41 AM (IST) Dec 27
கோவையில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வேறு பெண்ணுடன் கணவர் இருந்ததை கண்ட மனைவி, அவர் மதுபோதையில் தூங்கியபோது அவரது மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.
09:38 AM (IST) Dec 27
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கி இருந்த பெரிய ஆர்டர் திடீரென கேன்சல் ஆனதால், கடனாளியாக மாறி இருக்கிறார் மனோஜ். இதையடுத்து என்ன ஆனது என்பதை விரிவாக பார்க்கலாம்.
09:04 AM (IST) Dec 27
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த, பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
08:31 AM (IST) Dec 27
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க இருந்த தமிழ் சோறு பிசினஸுக்கு கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் விசாலாட்சி. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
08:18 AM (IST) Dec 27
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜனவரி 5, 2026 அன்று ஒரு நாள் காளான் வளர்ப்புப் பயிற்சியை வழங்குகிறது. சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த செயல்முறை விளக்கங்கள் இதில் அடங்கும்.
07:47 AM (IST) Dec 27
முன்னணி ஐடி நிறுவனமான TCS, 2025 மற்றும் 2026-ல் பட்டம் பெறும் B.Sc, BCA, மற்றும் B.Voc மாணவர்களுக்காக Ignite மற்றும் Smart Hiring மூலம் மாபெரும் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
07:20 AM (IST) Dec 27
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையாக சில நிர்வாகிகளை நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.