MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதியின் தம்பிகள் பேசியது என்ன? அட்லீ, லோகேஷ், நெல்சன் ஸ்பீச் இதோ

தளபதியின் தம்பிகள் பேசியது என்ன? அட்லீ, லோகேஷ், நெல்சன் ஸ்பீச் இதோ

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், அட்லீ, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் என்ன பேசினார்கள் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 27 2025, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan Audio Launch
Image Credit : X

Jana Nayagan Audio Launch

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வந்து செம ஸ்டைலிஷ் லுக்கில் கலந்துகொண்டார். நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்கள் பட்டியலில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகியோரும் இந்த ஆடியோ லாஞ்சில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்கள் மூவரையும் தன்னுடைய தம்பிகள் போலவே பார்த்து வருகிறார் விஜய். இவர்கள் மூவரும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசினார்கள் என்பதை பார்க்கலாம்.

24
அட்லீ ஸ்பீச்
Image Credit : Instagram

அட்லீ ஸ்பீச்

நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. இவர் பேசுகையில், என்னோட அண்ணன்... என்னோட தளபதி என்று சொன்னதும் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அவர், விஜய் அண்ணா நான் உதவி இயக்குநராக வேலை பார்க்கும் போதே என்னை அழைத்து நீ ரொம்ப நல்லா வேலை பாக்குற, உங்கிட்ட எனக்கு எதாவது கதை வச்சிருக்கியா என கேட்டார். அந்த சமயத்தில் அவர் 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். எந்த ஒரு பெரிய நடிகரும் இதை செய்ய மாட்டார்கள்.

என்னுடைய சக்சஸ் எல்லாவற்றிற்கும் விஜய் அண்ணா தான் காரணம். நாம் எல்லாரும் நன்கு பிரார்த்தனை செய்தால், கடவுள் நாம் நினைப்பதை பரிசாக கொடுப்பார். தளபதியின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் நன்கு பிரார்த்தனை செய்வோம் என சொல்லிவிட்டு, அங்கிருந்த ரேம்பில் ஓடிச் சென்று, எதிரே அமர்ந்திருந்த விஜய்யை கட்டிப்பிடித்தார் அட்லீ.

Related Articles

Related image1
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சிலும் ‘நண்பர் அஜித்’ ஸ்டைலை ஃபாலோ பண்ணிய விஜய்... தரமான லுக்கில் தளபதி...!
Related image2
விஜய் கண்முன்னே கைது செய்யப்பட்ட ரசிகர்... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு
34
லோகேஷ் கனகராஜ் பேசியது என்ன?
Image Credit : instagram

லோகேஷ் கனகராஜ் பேசியது என்ன?

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர், லியோ ஆகிய மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அவர் பேசியதாவது : “இது விஜய் அண்ணாவின் கடைசிப் படம் என சொல்லும்போது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. மாஸ்டர் மற்றும் லியோ என்னோட கெரியரில் மிக முக்கியமான படங்கள். அந்த படங்களை எனக்கு கொடுத்ததற்ககாக நன்றி விஜய் அண்ணா. என் லியோவிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னால், லியோ 2 படத்துக்காக கால்ஷீட் கேட்பேன். அதற்கு அவர் பிளெடி ஸ்வீட் என பதிலளிப்பார்.

நான் ஜனநாயகன் டீமில் உள்ள எல்லோருடனும் வேலை பார்த்திருக்கிறேன். ஜனநாயகன் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா. அப்படியே உங்க பெரிய பெரிய ஆசையும் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என கூறினார்.

44
நெல்சன் என்ன பேசினார்?
Image Credit : our own

நெல்சன் என்ன பேசினார்?

நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். அவர் பேசியதாவது : “ஜனநாயகன் ஆடியோ லாஞ்சை பார்க்கும் போது அர்ஜெண்டினா உலக கோப்பை கால்பந்து பைனல்ஸ் மேட்சை பார்ப்பது போல் உள்ளது. நான் பீஸ்ட் படத்தில் செய்த தவறுக்காக அவருடம் மேலும் ஒரு படத்தில் பணியாற்ற ஆசைப்படுகிறேன். பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றபோது எனக்கு போன் போட்டு நான் ஓகேவாக இருக்கிறேனா என்று செக் பண்ணுவார் விஜய் சார்.

அவரிடமே உங்களுக்கு என்மீது கோபம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ஒரு படம் நம்முடைய நட்பை தீர்மானிக்காது. அவருடன் நெருக்கமாக பழகி இருக்கிறேன். என்னுடைய அண்ணன் போன்று தான் அவரை பார்க்கிறேன்” என நெல்சன் கூறினார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
லோகேஷ் கனகராஜ்
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Related Stories
Recommended image1
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சிலும் ‘நண்பர் அஜித்’ ஸ்டைலை ஃபாலோ பண்ணிய விஜய்... தரமான லுக்கில் தளபதி...!
Recommended image2
விஜய் கண்முன்னே கைது செய்யப்பட்ட ரசிகர்... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved