- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Grey Hair Home Remedies : வெள்ளை முடியை நிரந்தரமா மாற்ற இதைவிட சிறந்த வழி இல்லை; ஒருமுறை செஞ்சு பாருங்க
Grey Hair Home Remedies : வெள்ளை முடியை நிரந்தரமா மாற்ற இதைவிட சிறந்த வழி இல்லை; ஒருமுறை செஞ்சு பாருங்க
வெள்ளை முடியை கருப்பாக்க ஹேர் டைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக முடியை கருப்பாக மாற்ற சில டிப்ஸ்கள் இங்கே.

Grey Hair Home Remedies
சிறு வயதிலேயே நரை முடி வருவது தற்போது சாதாரணமாகிவிட்டது. இதை மறைக்க ஹேர் டை பயன்படுத்தினால் முடி சேதமடையும். எனவே, இயற்கையான வழிகளில் முடியை கருப்பாக்க முயற்சிப்பது நல்லது. அது எப்படியென்று இந்த பதிவில் காணலாம்.
வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் இயற்கையான தீர்வுகள் :
1. தேங்காய் எண்ணெயும் நெல்லிக்காய் பொடியும்..
இவை இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து லேசாக சூடாக்கவும். பின் வடிக்கட்டி அந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி விரைவில் கருப்பாக மாறும்.
2. மருதாணியும் காபித்தூள்..
காபி பொடியில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த கலவையுடன் மருதாணி பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை தலையிட தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இது வெள்ளை முடியை கருமையாக மாற்றும்.
3. கறிவேப்பிலையும் தயிரும்..
கருவேப்பிலையுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை ஹேர் பேக்காக வாரத்திற்கு ஒரு முறை போட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.
4. வெந்தய ஹேர் பேக்
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து அந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி பிறகு தலைக்கு குளிக்கவும். வாரத்துக்கு ஒரு முறை இந்த ஹேர் பேக் போட்டு வந்தால் முடி வலுவாகும். வெள்ளை முடிவும் கருப்பாக மாறும்.

