- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Grey Hair Home Remedies : இளம் வயதில் நரைமுடியா? தேங்காய் எண்ணெய்ல ஒரு பொருள் கலந்து தேய்த்தால் ஆளே மாறிடுவிடுங்க
Grey Hair Home Remedies : இளம் வயதில் நரைமுடியா? தேங்காய் எண்ணெய்ல ஒரு பொருள் கலந்து தேய்த்தால் ஆளே மாறிடுவிடுங்க
நரை முடியை மறைக்க ஹேர் டை பயன்படுத்துகிறீர்களா? அதைவிட சூப்பரான வீட்டு வைத்திங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Home Remedies for Premature Greying
தற்போது பெரும்பாலான இளைஞர்கள் நரை முடி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவு முறை, ரசாயனம் கலந்த ஷாம்புகள் பயன்படுத்துதல் போன்றவை வெள்ளை முடி வருவதற்கு காரணமாகும். நீங்களும் நரைமுடி பிரச்சனைகள் அவதிப்பட்டால் கடையில் விற்பனையாகும் ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதிலாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. தலைமுடியும் கருப்பாக மாறும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
நெல்லிக்காய் பொடி மற்றும் தேங்காய் எண்ணெய்
நெல்லிக்காய் பொடி மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து சூடாக்கவும். ஆறிய பிறகு, இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இது முடியை கருமையாக்கி ஆரோக்கியமாக்கும்.
மருதாணி பொடி
காபி டிகாஷனில் மருதாணி பொடியை கலந்து பேஸ்ட் செய்து, நரைத்த முடியில் தடவவும். இது முடியை கருமையாக்கி, பளபளப்பாக்கும். வெங்காய சாற்றில் தேன் கலந்து தலையில் தடவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையை தயிருடன் அரைத்து வாரமொருமுறை தடவினால் முடி கருமையாகும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தடவினால் முடி வலுப்பெறும். தேங்காய்ப் பாலில் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

