- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Dye : ஒரே ஒரு கிச்சன் பொருள்! நரை முடிக்கு குட்பை இயற்கையான ஹேர் டை தயாரிக்க சூப்பர் டிப்ஸ்
Hair Dye : ஒரே ஒரு கிச்சன் பொருள்! நரை முடிக்கு குட்பை இயற்கையான ஹேர் டை தயாரிக்க சூப்பர் டிப்ஸ்
நரை முடியை மறைக்க இரசாயனங்கள் இல்லாத இயற்கை ஹேர் டை வேண்டுமா? வீட்டிலேயே கருப்பு எள் கொண்டு பக்க விளைவுகள் இல்லாத ஹேர் டை தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Black Sesame Seed Hair Dye
நரை முடி வரத் தொடங்கினால், பலர் வெளியே செல்லத் தயங்குகிறார்கள். இளைஞர்களிடையே இந்த பிரச்சனை அதிகம். அதனால் ஹேர் டை பயன்படுத்துகின்றனர். ஆனால் ரசாயனம் கலந்த ஹேர் டிரையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் முடியின் இயற்கையான நிறம் பாதிக்கப்படும். ஆனால் கருப்பு எள்ளை கொண்டு வீட்டிலேயே சூப்பரான ஹேர் டை தயாரிக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பு எள் ஹேர் டை தயாரிப்பது எப்படி?
இதற்கு இரண்டு ஸ்பூன் கருப்பு எள் எண்ணெய், களிமண் விளக்கு, பருத்தி துணி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது களிமண் விளக்கில் எள் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள் அடுத்து பருத்தி துணியை விளக்கு திரி போல உருட்டி அதை விளக்கில் வைத்து திரியை ஏற்றவும். பிறகு ஒரு பெரிய கிணத்தை கொண்டு விளக்கை மூடவும். சுடரிலிருந்து வரும் கருப்புப் புகையானது கிண்ணம் மீது பட்டு கரி குவியும். விளக்கு அணந்த பிறகு கிண்ணத்தில் படிந்திருக்கும் கரியை ஒரு தட்டில் வைக்கவும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் கலக்கவும். அவ்வளவுதான் சூப்பரான ஹேர் டை ரெடி.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
தயாரித்து வைத்த இந்த ஹேர் டையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. எனவே இதை தயக்கமின்றி நரை முடி மீது தடவலாம். வாரத்திற்கு 2-3 முறை தடவினால் தலை முடி கருப்பாக மாறும்.