திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, ஊழல் மலிந்துள்ளதாக கடுமையாக சாடினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுச்செயலாளர் முருகானந்தம், மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் எம்ஆர் ராஜா, எஸ்.எஸ். ரமணிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: டாஸ்மார்க் படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் படிப்படியாக இப்போது எண்ணிக்கையை கூட்டி இருக்கிறார்கள். திட்டம் போடுவது இந்த பொங்கலுக்கு எத்தனை கோடி ரூபாய் மது விற்பனை செய்ய வேண்டும் அடுத்த தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனை போன தீபாவளி விட இந்த தீபாவளிக்கு கூடுதல் விற்பனை செய்ய வேண்டும் என திட்டம் போடுகிறார்கள். அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரி மின் கட்டணம் போன்ற உயர்த்தி உள்ளது. இப்போது மின் கட்டணம் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும் அளவுக்கு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது
2023 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் அதிகமான சாயப்பட்டறை கழிவுகள் உள்ளது காலிங்கராயன் கால்வாய் மற்றும் நிலத்தடி நீர் கழிவு சென்றதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மஞ்சள் நகரம் என்று அழைக்கப்பட்ட ஈரோடு மாநகரம் புற்றுநோய் மாநகரமாக மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு மோசமான சூழ்நிலை இருக்கிறது. பள்ளி கட்டிடம் இணைந்து மாணவர்கள் உயிரிழப்பு நடக்கிறது. ஆனால் பொய்யான தகவல் மூலம் பள்ளிகல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்
பள்ளிக்கூட வாசலில் எங்க பார்த்தாலும் மெத்தபெட்டமையன் கஞ்சா போன்ற போது விற்பனை செய்யப்படுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடங்கி விட்டதாக திமுக கூட்டணி போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த திட்டத்தை நிறுத்தவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக 1200 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள். அதனால் தான் மத்திய அரசு நிதியை நிறுத்தி உள்ளது. மத்திய அரசு சொல்லாமல் 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. ஊதியத்தை வாரந்தோறும் பெற்று தரும் வகையிலும் கொண்டு வந்திருக்கிறது. இதில் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதிமுக பாஜக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. மக்கள் நலனுக்கான கூட்டணி மக்களை பற்றி சிந்திக்க கூட்டணி மக்களை நேசிக்கும் தலைவர்கள் இருக்கக்கூடிய கூட்டணி. மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட யார் மேலாவது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? ஆனால் இன்று திமுக அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.
மக்களைப் பற்றி கவலை இல்லை, திமுக ஆட்சியில் 42 லாக் அப் மரணங்கள் நடந்திருக்கிறது. எங்க பார்த்தாலும் மரண ஓலங்கள் இருக்கிறது. 700க்கும் மேற்பட்ட படுகொலைகள், குழந்தைகளுக்கு எதிரான 15 சதவீதம் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு சரியாக இல்லை கஞ்சா போதைப்பொருட்கள் டாஸ்மாக் இன்னும் பத்து ஆண்டுகளில் யாருக்கும் குழந்தை பாக்கியம் என்பது இல்லாமல் போய்விடும். கள் குடித்தால் கூட உடலுக்கு நல்லது இயற்கையான பானம்.
பாஜக மதசார்பின்மை உண்மையாக கடைபிடிக்கிறது. ஆனால் திமுக கடைபிடிக்கிறதா முதல்வருக்கு தைரியம் வந்தால் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதற்கு தைரியம் இருக்கிறதா. துணை முதல்வர் உதயநிதியை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று தான் கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் நீதிபதியை விமர்சனம் செய்கிறார். கலைஞர் இறந்தபோது சென்னை மெரினா கடற்கரையில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது அன்று நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. . 41% இருந்த திமுகவின் செல்வாக்கு 30 சதவீதமாக குறைந்துள்ளது என கருத்துக்கணிப்புகள் வந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு 36 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. திமுகவின் செல்வாக்கு குறைய குறைய தேசிய ஜனநாயக கூட்டணி அதிக செல்வாக்கை பெற்று அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார்.


