- Home
- உடல்நலம்
- Lipomas Home Remedies : உடம்புல கொழுப்பு கட்டி தென்படுதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணா 'சீக்கிரமே' கரைஞ்சிடும்!!
Lipomas Home Remedies : உடம்புல கொழுப்பு கட்டி தென்படுதா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணா 'சீக்கிரமே' கரைஞ்சிடும்!!
உடம்பில் இருக்கும் கொழுப்பு கட்டிகள் இருக்கிற இடம் தெரியாமல் கரைந்து போக உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு காணலாம்.

Lipomas Home Remedies
லிம்போமா (Lipoma) என்பது நம் உடம்பில் இருக்கும் கொழுப்பு கட்டியாகும். நடுத்தர வயதினருக்கு இது அதிகமாகவே வரும். கொழுப்பு கட்டிகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் மரபணு. இத்தகைய சூழ்நிலையில் பல வருடங்களாக உங்களது உடம்பில் கொழுப்பு கட்டிகள் இருக்கிறதா? அதை ஆபரேஷன் பண்ணாமல் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இருக்கிற இடம் தெரியாமல் கரைத்து விடலாம். அந்த வீட்டு வைத்தியங்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
நல்லெண்ணெய் :
இந்த எண்ணெயில் நிறைய நன்மைகள் உள்ளன. கொழுப்பு கட்டிய கரைக்க இந்த எண்ணெயை லேசாக சூடுப்படுத்தி அதில் மஞ்சள் கிழங்கை அரைத்து குழைத்து கட்டி உள்ள இடங்களில் தடவி வந்தால் கொழுப்பு கட்டி வேகமாக மறைந்து விடும்.
ஆளி விதை எண்ணெய் :
ஆளி விதைகளில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆளி விதை பல சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கொழுப்பு கட்டி அபாயத்தை குறைக்கும். ஆளி விதையை எண்ணெயை லேசாக சூடு செய்து கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி சுமார் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் கொழுப்பு கட்டிகள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.
விளக்கெண்ணெய் :
கொழுப்பு கட்டியை கரைக்க விளக்கெண்ணெய் சிறந்த வீட்டு வைத்தியமாகும். சரும பிரச்சனைகளுக்கும், தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. இந்த எண்ணெயை கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் கொழுப்பு கட்டியின் வளர்ச்சி வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் பொடி :
மஞ்சளில் குர்குமின் இருக்கிறது. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கொழுப்பு கட்டிகள் உருவாகுவதை தடுப்பது மட்டுமல்லாமல், அதன் தீவிரத்தையும் குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. கொழுப்பு கட்டியைக் கரைக்க தினமும் இரவு தூங்கும் முன் மஞ்சள் தூளில் ஆலிவ் ஆயில் சேர்த்து அந்த பேஸ்டை கட்டிகள் இருக்கும் இடங்களில் தடவி விட்டு தூங்கவும். பிறகு மறுநாள் காலை எழுந்ததும் சூடான நீரால் சுத்தம் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கொழுப்பு கட்டிகள் குறையும்.
உணவு முறையில் மாற்றங்கள் அவசியம் :
உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்க பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வெள்ளரிக்காய், பிரக்கோலி போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதுபோல இனிப்பு பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பெர்ரி வகைகள் போன்ற சீசன் பழங்களை மறக்காமல் சாப்பிடவும்.
மேலே சொன்ன வீட்டு வைத்திய முறைகள் மற்றும் உணவு முறையில் மாற்றம் செய்தால் கொழுப்பு கட்டிகள் விரைவில் கரையும்.

