பூண்டில் இருக்கும் முழு ஊட்டச்சத்துக்களை பெற அதை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். ஆனால் இது சமையலுக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பூண்டில் பூஞ்சை எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. முக்கியமாக கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு மிகவும் சிறப்பாக பங்களிக்கும். நாளின் தொடக்கத்தை கூட சில பூண்டு பற்களுடன் ஆரம்பிங்கள் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் 2 பற்கள் பூண்டு சாப்பிட்டு வந்தால் உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதன் நன்மைகள் :
1. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
பூண்டு உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, சர்க்கரை நோய் அபாயத்தையும் தடுக்கும்.
2. சளி, இருமலுக்கு நல்லது
சளி இருமல் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு ரொம்பவே நல்லது. எனவே தினமும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள். இந்த பிரச்சனைகளின் அபாயம் குறையும்.
3. இதய நோய் அபாயம் குறையும்
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பூண்டு பெரிதும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
4. கண் ஆரோக்கிய மேம்படும்
பூண்டில் இருக்கும் ஆன்டி பாக்டரியல் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கண்ணாடித்து மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
5. சிறுநீரக தொற்று வராமல் தடுக்கும்
மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு சிறுநீரகப் பாதை நோய் தொற்று ஏற்படும் எனவே அதை தடுக்க பூண்டு உதவும்.
6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
பூண்டில் இருக்கும் பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் பூண்டு சாப்பிடுங்கள். பருவ கால நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
7. புற்றுநோயை தடுக்கும்
பூண்டில் இருக்கும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் பெருங்குடல் மற்றும் வயிறு போன்ற இரைப்பை குடல் புற்று நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
8. செரிமானத்திற்கு நல்லது
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். பூண்டு செரிமான கோளாறுகளை தடுக்கும். உடலில் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பூண்டை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுங்கள். மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்வும் பூண்டு உதவுகிறது.
எப்படி சாப்பிடணும்?
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து வந்தால் மேலே சொல்லப்பட்டுள்ள நன்மைகளை பெறுவீர்கள். உங்களுக்கு ஒவ்வாமை அல்லது வயிற்று பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு சாப்பிடவும்.
