Honey and Garlic : பூண்டு, தேன்.. இப்படி சாப்பிட்டால் உடல் எடை சர்ருனு குறைஞ்சிடும்!
பூண்டுடன் தேனை எப்படி சாப்பிட வேண்டும். அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Garlic and Honey Benefits
பூண்டு ஒவ்வொரு வீட்டில் சமையலறையில் இருக்கும் முக்கியமான பொருள். இறைச்சி, காய்கறிகள், பருப்பு போன்ற பல உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டு உணவுகளில் கூடுதல் சுவை மற்றும் நறுமணத்தை கொடுக்கும். பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும் தெரியுமா? ஆம், பூண்டில் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல் சளி, இருமல், வாந்தி போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும். பொதுவாக வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிகபட்ச நன்மைகளை பெற அதை சாப்பிடுவதற்கான சிறந்த வழி என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பூண்டு மற்றும் தேன் சாப்பிட சரியான முறை:
ஒரு பூண்டை துண்டை தோலுரித்து அதை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் சிறிதளவு தேன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பூண்டை மெதுவாக மென்று சாப்பிடுங்கள். பூண்டின் காரத்தன்மை அதிகமாக உணர்ந்தால் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் சூடான நீரை குடியுங்கள்.
மற்றொரு வழி:
காற்றுப்புகாத ஒரு கண்ணாடி ஜாடியில் பூண்டை தோலுரித்து சின்ன சின்னதாக நறுக்கி கலந்து தினசரி பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்கள்.
எப்போது சாப்பிடலாம்?
பூண்டு மற்றும் தேன் கலந்த கலவையை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். அதுவே தேனுடன் சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.
பூண்டு மற்றும் தேன் கலவை நன்மைகள் :
- நோய் தொற்றுகளை குணப்படுத்த உதவும்.
- பூண்டில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.
- பூண்டு ரத்த ஓட்டத்தை சீராக்கும் எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லது.
- கொழுப்பின் அளவை சீராக வைக்க விரும்புபவர்கள் பூண்டு மற்றும் தேன் கலவையை தினமும் சாப்பிடுங்கள். இதனால் இதய பிரச்சினை வராது.
- வயிறு வலி, வாயு, அஜீரணம் உள்ளிட்ட பல பிரச்சினை குணப்படுத்த பூண்டு மற்றும் தேன் கலவை உதவும்.
- பூண்டு மற்றும் தேன் கலவையை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.