Published : Jun 22, 2025, 08:37 AM ISTUpdated : Jun 23, 2025, 12:07 AM IST

Tamil News Live today 22 June 2025: IND vs ENG 1st Test - மீண்டும் ஏமாற்றிய சாய் சுதர்சன்! 2வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, ஈரான், அமெரிக்கா தாக்குதல், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:07 AM (IST) Jun 23

IND vs ENG 1st Test - மீண்டும் ஏமாற்றிய சாய் சுதர்சன்! 2வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சாய் சுதர்சன் விரைவில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Read Full Story

12:03 AM (IST) Jun 23

விஜய் தேவரகொண்டாவிற்கு எதிராக பழங்குடி சமூக அவமதிப்பு வழக்கு!

Vijay Deverakonda : ரெட்ரோ பட விழாவில் விஜய் தேவரகொண்டா பழங்குடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

11:31 PM (IST) Jun 22

TNPL 2025 - மதுரையை பந்தாடிய திருப்பூர்! 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருப்பூர் தமிழன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Read Full Story

11:07 PM (IST) Jun 22

EPFO நிறுவனத்தில் பணமழை - ஒரே மாதத்தில் நிறுவனத்தில் இணைந்த 1.91 மில்லியன் வாடிக்கையாளர்கள்

ஏப்ரல் 2025 இல், EPFO ​​உறுப்பினர் எண்ணிக்கை 1.91 மில்லியன் அதிகரித்துள்ளது, இது மார்ச் மாதத்தை விட 31.31% அதிகமாகும். புதிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இளம் தொழிலாளர்களாக இருந்தனர்.

Read Full Story

10:54 PM (IST) Jun 22

இந்தியாவில் கார்களை கூவி கூவி விற்கும் Renault, Volkswagen, Skoda நிறுவனங்கள்

ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களான ரெனால்ட், வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகியவை இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க போராடுகின்றன.

Read Full Story

10:52 PM (IST) Jun 22

TNPL 2025 - வருண் சக்கரவர்த்தி அதிரடியால் திண்டுக்கல் டிராகன் வெற்றி! சேலத்தை வீழ்த்தியது!

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Read Full Story

10:27 PM (IST) Jun 22

இனி குடும்பத்தோட ஜாலியா ட்ரிப் போகலாம்! குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்

பெரிய குடும்ப மின்சார வாகன விருப்பங்கள் இந்தியாவில் குறைவு. ஆனால் மஹிந்திரா, எம்ஜி, கியா போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு பெரிய குடும்ப மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன.

Read Full Story

10:22 PM (IST) Jun 22

இந்து கடவுளை மட்டும் யாரும் நம்பமாட்டார்கள் – முருகன் மாநாட்டின் பவன் கல்யாண் பேச்சு!

Pawan Kalyan Speech at Madurai Murugan Maanaadu : மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மாற்றம் ஒன்றே மாறாதது , தர்மத்தின் வழியில் நாம் சென்றால் நமக்கு வெற்றி தான் என்று கூறியுள்ளார்.

Read Full Story

10:14 PM (IST) Jun 22

OnePlus Nord 4, CE4! ஒரேடியாகக் குறைக்கப்பட்ட விலை - கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்

OnePlus Nord 5 மற்றும் CE5 அறிமுகத்திற்கு முன்னதாக, Nord 4 மற்றும் Nord CE4 ஸ்மார்ட்போன்களின் விலை Flipkart மற்றும் விஜய் சேல்ஸில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் புதிய ஃபோன்களை வாங்கலாம்.
Read Full Story

09:42 PM (IST) Jun 22

Jasprit Bumrah - ஜஸ்பிரித் பும்ரா அசத்தல் பவுலிங்! இங்கிலாந்து அணி 465 ரன்னுக்கு ஆல் அவுட்!

ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தல் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Read Full Story

09:03 PM (IST) Jun 22

இனி ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது – மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

Annamalai Speech at Madurai Murugan Maanaadu : இனி ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது என்றும், 2 நாடுகளில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

Read Full Story

08:12 PM (IST) Jun 22

டெஸ்ட் கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்த பும்ரா! யாரும் நெருங்க முடியாது!

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

08:02 PM (IST) Jun 22

கார்த்திகை தீபம் சீரியல் ஹீரோ கார்த்திக் ராஜின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Karthik Raj NetWorth and Salary Details in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் கார்த்திக் ராஜின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

07:45 PM (IST) Jun 22

ஜெகன் மோகன் ரெட்டியின் ஊர்வலத்தில் பரபரப்பு! கார் டயரில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த தொண்டர்

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய ஊர்வலத்தில் ஜெகன் மோகனின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Story

06:16 PM (IST) Jun 22

நாளை முதல் 5 நாட்களுக்கு! வானிலை மையம் கொடுத்த அலர்ட் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Read Full Story

06:11 PM (IST) Jun 22

நடுவரிடம் கோபப்பட்டு பந்தை தூக்கி எறிந்த ரிஷப் பண்ட்! ரசிகர்கள் எதிர்ப்பு! என்ன நடந்தது?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பந்தை தூக்கி எறிந்து நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். இதற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read Full Story

06:00 PM (IST) Jun 22

R Madhavan Wife Sarita Birje " மாதவனின் மனைவி யார் தெரியுமா? அவர் சாதனையாளரா?

R Madhavan Wife Sarita Birje : நடிகர் ஆர். மாதவனின் மனைவி சரிதா பிர்ஜே. இவர் பிரபல நடிகரின் மனைவி மட்டுமல்ல, திறமையான ஃபேஷன் டிசைனர் மற்றும் தொழில்முனைவோரும் கூட.

Read Full Story

05:02 PM (IST) Jun 22

விஜய்யின் Jana Nayagan First Roarல் கவனிக்க தவறிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

Jana Nayagan First Roar : தளபதி விஜய் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான Jana Nayagan First Roar வீடியோவில் முக்கியமான விஷயம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

Read Full Story

04:56 PM (IST) Jun 22

பும்ரா மட்டும் போதுமா? மற்ற பவுலர்கள் இருந்து என்ன பயன்? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பும்ராவைத் தவிர மற்ற பவுலர்கள் சொதப்பியதை ரவி சாஸ்திரி விமர்சித்தார்.

Read Full Story

04:32 PM (IST) Jun 22

Upcoming Volkswagen SUV - வோக்ஸ்வாகன் டெரா - 5-நட்சத்திர பாதுகாப்புடன் SUV

வோக்ஸ்வாகனின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி, டெரா, லத்தீன் NCAPல் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது பயணிகள் மற்றும் பாதசாரிகள் இருவருக்கும் வலுவான பாதுகாப்பை வழங்குகிறது.

Read Full Story

04:08 PM (IST) Jun 22

Power Cut - சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ முழு விவரம்!

தமிழகத்தில் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Read Full Story

03:54 PM (IST) Jun 22

2வது டெஸ்ட்டில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால்! களமிறங்கும் 'சூப்பர்' பாஸ்ட் அசுரன்!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்குகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Full Story

03:31 PM (IST) Jun 22

Brinda Das - ஆனந்தம் சீரியல் வில்லி நடிகையை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க

‘ஆனந்தம்’ சீரியலில் வில்லியாக நடித்த நடிகை பிருந்தா தாஸின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Read Full Story

02:56 PM (IST) Jun 22

பஹல்காம் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. LeT அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளுக்கு உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Read Full Story

02:54 PM (IST) Jun 22

மகன் விஜய் பிறந்தநாளில் தாயார் ஷோபா செய்த சிறப்பு பூஜை.! வீடியோ இதோ

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா செய்துள்ள சிறப்பு பூஜையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story

02:51 PM (IST) Jun 22

முருகனை கும்பிட்டால் மத கலவரம் வருமா? அப்படினா! இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? ஆளுநர் CP ராதாகிருஷ்ணன்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கந்த சஷ்டி கவசம் குறித்து பேசியுள்ளார். முருகனை வணங்குவது குறித்தும், ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விளக்கியுள்ளார்.
Read Full Story

02:19 PM (IST) Jun 22

Old Pension Scheme - பழைய ஓய்வூதியத் திட்டம்! அப்பட்டமான ஏமாற்று வேலை! ஏமாறும் அரசு ஊழியர்கள்! சொல்வது யார் தெரியுமா?

திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நான்கு ஆண்டுகள் ஆட்சியிலும் நிறைவேற்றவில்லை. ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பணியிலும் முன்னேற்றமில்லை. 

Read Full Story

02:10 PM (IST) Jun 22

Salman Khan Health Issue - சல்மான் கானுக்கு உடலில் இத்தனை நோய்களா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகர் சல்மான் கான் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

 

Read Full Story

02:08 PM (IST) Jun 22

Razorpay’s Journey - 100 முறை நிராகரிப்பு.. 7.5 பில்லியன் Fintech-ன் வெற்றிக்கதை

இரண்டு IIT பட்டதாரிகளால் கல்லூரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட ரேசர்பே, 100க்கும் மேற்பட்ட நிராகரிப்புகளைச் சந்தித்தது. இன்று, இது ஒரு முழுமையான ஃபின்டெக் தளமாக மாறியுள்ளது.

Read Full Story

01:44 PM (IST) Jun 22

உலகில் டாப் 10 பாதுகாப்பான நாடுகள் பட்டியல்! இந்தியாவின் இடம் என்ன?

ஈரான்-இஸ்ரேல் போரும் ரஷ்யா-உக்ரைன் போரும் உலகையே நிலைகுலையச் செய்துள்ளன. இந்த கொந்தளிப்புக்கு மத்தியில் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி குறியீட்டு அறிக்கை பாதுகாப்பான 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Read Full Story

01:17 PM (IST) Jun 22

Desingu Raja Teaser - வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விமலின் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசர் வெளியானது.!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்குராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Read Full Story

01:10 PM (IST) Jun 22

New Rules - இந்தியாவில் உள்ள அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ஏபிஎஸ், 2 ஹெல்மெட்கள் கட்டாயம்.. எப்போது தெரியுமா?

ஜனவரி 1, 2026 முதல் அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் மற்றும் இரண்டு பிஐஎஸ்-சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்கள் கட்டாயமாக்கப்படும்.

Read Full Story

01:02 PM (IST) Jun 22

தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? முதலிடத்தில் அண்ணாமலை! திமுகவுக்கு ஷாக் கொடுத்த கருத்து கணிப்பு!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாகவும், விஜய் உள்ளிட்ட பலரும் முக்கியப் போட்டியாளர்களாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Read Full Story

12:38 PM (IST) Jun 22

ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்கா ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அச்சுறுத்தியுள்ளது. உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஜலசந்தியை மூடுவது சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Read Full Story

12:33 PM (IST) Jun 22

Mahindra Truck - மைலேஜ் உத்தரவாதம்.. மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய ஃபியூரியோ 8 டிரக்.. என்ன ஸ்பெஷல்?

அதிக மைலேஜைப் பெறுங்கள் அல்லது டிரக்கைத் திருப்பிக் கொடுங்கள்" என்ற தைரியமான உத்தரவாதத்துடன், Furio 8 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதிக வருமானம் ஈட்டும் சொத்தாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Read Full Story

11:54 AM (IST) Jun 22

Siragadikka Aasai Promo - சீதாவுக்கு திருமணம்.. மீனாவுக்கு டைவர்ஸ்? பரபரப்பின் உச்சத்தில் 'சிறகடிக்க ஆசை' சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

 

Read Full Story

11:35 AM (IST) Jun 22

விஜய்க்கு வேற லெவலில் வாழ்த்து சொன்ன தமிழிசை! அண்ணாமலை, சீமான் என்ன சொல்லி இருக்காரு பாருங்க!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

Read Full Story

11:30 AM (IST) Jun 22

Financial Tips - ரூ.2 லட்சம் சம்பளத்தை மிஞ்சும் 80 ஆயிரம் சம்பளம்.. நிதி வெற்றிக்கான ரகசியம்!

அதிக சம்பளம் நிதி நல்வாழ்வை உறுதி செய்யாது. வாழ்க்கை இலக்குகளுடன் பணத்தை ஒழுங்கமைப்பதுதான் நிதி ரீதியாக பாதுகாப்பான நபர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

Read Full Story

11:17 AM (IST) Jun 22

ஈரானின் அடுத்த தலைவர் யார்? காமேனியின் ரகசியத் திட்டம்

இஸ்ரேலுடனான போர் தீவிரமடையும் நிலையில், தனக்குப் பின் வாரிசாக மூன்று மதகுருமார்களை ஈரானின் உச்ச தலைவர் காமேனி தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், இந்த பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Full Story

10:23 AM (IST) Jun 22

அப்பாடா! வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்!

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இந்நிலையில், வானிலை மையம் மழைக்கு நாள் குறித்துள்ளது.
Read Full Story

More Trending News