விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Siragaikka Aasai This Week Promo
விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக மாறி உள்ளது. சுமார் 700 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் சமீப காலமாக தேவையில்லாத கதைக்களங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சம்பந்தமில்லாத கதைக்களத்தால் ‘சிறகடிக்க ஆசை’ ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் நடந்த விஷயம், ஹீரோ முத்துவுக்கான பிளாஷ்பேக் ஆகியவை இன்னமும் சொல்லப்படாமலேயே இருக்கிறது. மனோஜ் அவ்வளவு தவறு செய்தாலும் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் காட்டப்பட்டு வருகிறது.
அருண்-சீதா பதிவு திருமணம்
ஆனால் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு இடையே ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படுவது போல காட்டப்பட்டு கொண்டே வருகிறது. தற்போது மீனாவின் தங்கை சீதா கான்ஸ்டபிள் அருணை காதலித்து வருகிறார். ஆனால் முத்தமிற்கும் அருணுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருக்கிறது. இதனால் சீதாவின் காதலை ஏற்றுக் கொள்வதற்கு முத்து மறுக்கிறார். முத்துவின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற வேண்டும் என்று சீதா நினைக்கிறார். தற்போது அருண் அவரை கட்டாயப்படுத்தி பதிவு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார். அப்பா இருந்திருந்தால் என் வாழ்க்கையை பிறர் முடிவேடுப்பார்களா என சீதா கவலை கொள்கிறார். எனவே சீதாவின் கவலையை தீர்த்து வைக்க மீனா அவருக்கு சாட்சி கையெழுத்து போட முடிவெடுத்து திருமணமும் செய்து வைக்கிறார்.
மீனாவை டைவர்ஸ் செய்யும் முத்து?
அதன்படி இந்த வார ப்ரோமோவில் சீதா மற்றும் அருண் இருவரையும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் மீனா, அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர் மீனா வெளியில் வரும் பொழுது முத்துவை சந்திக்கிறார். இதனால் மீனாவின் திருட்டுத்தனத்தை முத்து கண்டுபிடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்போதைக்கு இந்த விஷயம் முத்துவிற்கு தெரியாது என்றே கூறப்படுகிறது. ஸ்டேஷனுக்கு பூ கொடுக்க வந்ததாக கூறி மீனா இந்த விஷயத்தை இப்போதைக்கு சமாளித்து விடுவார் என்றே தெரிகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் மீனாவை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே ரவி ஸ்ருதி கல்யாணத்திற்கு கையெழுத்து போட்டதற்காக முத்து மிகப் பெரிய பிரச்சனை செய்திருந்தார்.
சிறகடிக்க ஆசை ப்ரோமோவால் கதறும் ரசிகர்கள்
இந்த நிலையில் முத்துவின் பரம எதிரியாக இருக்கும் அருணுக்கும் சீதாவுக்கும் திருமணம் செய்து வைத்த மீனாவை என்ன செய்யப் போகிறார் என்று ஆவல் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ட்ராக் ரசிகர்ளிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளது. ரசிகர்கள் மீனாவை கமெண்ட்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த மீனா இருக்கும் வரை இந்த சீரியல் உருப்படாது என்றும், சீதாவுக்கு கல்யாணம் மீனாவுக்கு டைவர்ஸ் என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரோகிணியின் மைண்ட் வாய்ஸ் எனக்கூறி “இந்த மீனா இருக்க வரைக்கும் என்னை யாரும் அசைக்க முடியாது” என்பது போன்ற நகைச்சுவையான பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ வர வர இந்த சீரியலின் ப்ரோமோவை கூட பார்க்க பிடிக்கவில்லை என்று தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டிஆர்பியில் பின்னடைவை சந்தித்த ‘சிறகடிக்க ஆசை’
ஒரு காலத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலின் கதை தற்போது தேவையில்லாத ட்ராக்குகளால் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இதை விரைவில் இயக்குனர் சரி செய்து மீண்டும் பழைய சிறகடிக்க ஆசை சீரியலை கொண்டு வருமாறு இயக்குனருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இயக்குனர் ரசிகர்களின் கதறல்களை காது கொடுத்து கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இல் இருந்து வந்த இந்த சீரியல் சமீப காலமாக சரிவை சந்தித்து வருவதும், சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் முதல் இடத்தை பிடிப்பதும் வழக்கமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
