- Home
- Cinema
- Brinda Das : ஆனந்தம் சீரியல் வில்லி நடிகையை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க
Brinda Das : ஆனந்தம் சீரியல் வில்லி நடிகையை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க
‘ஆனந்தம்’ சீரியலில் வில்லியாக நடித்த நடிகை பிருந்தா தாஸின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anandham Serial Actress Brinda Das
வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். சின்னத்திரை நடிகர்களின் வாழ்வியல் முறை, அவர்களின் குடும்பம் மற்றும் பிற விஷயங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதன் காரணமாக நடிகர், நடிகைகளை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் சில நடிகர்கள் ஒரு சில சீரியல்கள் அல்லது படங்களில் நடித்த பின்னர் திரைத் துறையில் இருந்து காணாமல் போய்விடுகின்றனர். அவர்கள் என்ன ஆனார்கள்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற எந்த ஒரு விபரமும் ரசிகர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் சில நடிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கம் பேக் கொடுக்கின்றனர்.
சன் டிவியின் ‘ஆனந்தம்’ தொடர்
சிலர் சமூக வலைதளங்களில் அப்போது புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகின்றனர். அதுபோல சில நாடகங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெற்ற ஒரு நடிகையாக இருப்பவர் பிருந்தா தாஸ். இவர் சன் டிவியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 6 ஆண்டுகளுக்கு 1297 எபிசோடுகளுடன் ஒளிபரப்பான ஒரு சீரியல்தான் ‘ஆனந்தம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி தியாகராஜன் இந்த தொடரை தயாரித்திருந்தார். நித்யானந்தம், செய்யாறு ரவி, விடுதலை ஆகியோர் இந்தத் தொடரை இயக்கி இருந்தனர். ஒரு குடும்பக் கதையை மையமாக வைத்து இந்த நாடகம் எடுக்கப்பட்டிருந்தது.
ரசிகர்களால் மறக்க முடியாத பிருந்தா தாஸ்
குடும்பத்தில் நடக்கும் சிக்கல்கள், குடும்ப உறவுகள், பாசப்பிணைப்புகள், அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றை இந்த நாடகம் சித்தரித்தது. இந்த சீரியலில் நடிகை சுகன்யா சாந்தி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து டெல்லி குமார், கமலேஷ், பிருந்தா தாஸ், வட்சலா ராஜகோபால், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 90களில் வளர்ந்த பலருக்கும் இந்த தொடரை மறந்திருக்க முடியாது. இந்த நாடகத்தில் பிருந்தா தாஸ் அபிராமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் அமைதியான அதேசமயம் அழுத்தமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். இந்த சீரியலில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் பிருந்தா தாஸ் நடித்திருக்கிறார்.
இயக்குனராக அவதாரம் எடுத்த பிருந்தா தாஸ்
‘ஆனந்தம்’ சீரியலுக்கு முன்பும் பின்பும் இவர் ‘கல்யாணம்’, ‘ரேகா ஐபிஎஸ்’ ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி ‘ஹாய் டா’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் வரிசையில் இணைந்த அவர் அதன் பின் எந்த பெரிய படங்களையும் இயங்கவில்லை. நடிப்பது, படங்களை இயக்குவதுடன் நடனத்திலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். மேலும் தனது சகோதரி உடன் சேர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பி-போர்ஸ் (B Force) அமைப்பை நடத்தி வருகிறார். இதை தனது பெற்றோர்களுக்காக அவர் அர்ப்பணித்துள்ளார். தற்போது அவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்கிற தகவல்களும் உள்ளன. இருப்பினும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
கிஷன் தாஸின் அம்மா பிருந்தா தாஸ்
இவரது மகன் கிஷன் தாஸ் பிரபலமான நடிகராவார். வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கிஷன் தாஸ் ‘முதல் நீ முடிவும் நீ’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் யூடியூபராகவும், சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராகவும் கிஷன் தாஸ் இருந்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் தனது தனித்துவமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த பிருந்தா தாஸை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.