Karthik Raj NetWorth and Salary Details in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் கார்த்திக் ராஜின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Karthik Raj NetWorth and Salary Details in Tamil : என்னதான் காரைக்குடியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் கார்த்திக் ராஜ் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாற்றிக் கொண்டார். இவருடைய அப்பா 30 ஆண்டுகாலம் சினிமாவில் இருந்துள்ளார். தயாரிப்பாளர் ஏ எல் ஸ்ரீனிவாசனுக்கு புரோடக்‌ஷன் மேனேஜராஜ பணியாற்றியுள்ளார். அதன் பிறகு எம்ஜிஆருக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

கார்த்திக் ராஜ் அறிமுகம்

இதையடுத்து எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளரானார். கார்த்திக் ராஜ் சினிமாவில் அறிமுகமாக இதுவும் ஒரு காரணம். இப்படி சினிமா பின்னணியை வைத்துக் கொண்டு சினிமாவில் சாதித்து வருகிறார். இன்றைய இளைஞர்களுக்கு கார்த்திக் ராஜ் தான் முன்னுதாரணமாக விளங்குகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வந்தார்.

கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை (கே5)

அதன் பிறகு தான் அவருக்கு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை (கே5) சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடிகை ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் 2014ல் ஜோடி நம்பர் 1 சீசன்7ல் நான்சி ஜெனிஃபர் உடன் இணைந்து நடனம் ஆடினார். ஆனால் அந்த ரியாலிட்டி ஷோவில் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

465 மற்றும் நாளு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை

தொடர்ந்து சின்னத்திரையில் கால் பதித்து வந்த கார்த்திக் ராஜிற்கு 465 மற்றும் நாளு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த 2 படங்களுமே பெரியளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விஜய் டிவியில் பல ஆண்டுகள் பணியாற்றி வந்த கார்த்திக் ராஜிற்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி செம்பருத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தது.

இதில் ஆதித்யா என்ற ரோலில் பெரிய பணக்கார வீட்டு பையனாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இன்று ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். இந்த சீரியலுக்கு பிறகு முகிலன் என்ற வெப் சீரிஸில் நடித்தார். ஆனால், இந்த சீரிஸ் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

கார்த்திகை தீபம்

அப்போது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் என்ற சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், லீடு ரோலில் கார்த்திக் ராஜ் நடித்தார். இந்த சீரியலில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

என்னதான் ஆபிஸ், கனா காணும் காலங்கள், செம்பருத்தி என்று ஒரு சில சீரியல்களில் கார்த்திக் ராஜ் நடித்திருந்தாலும் அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மூலமாக புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். கார்த்திக்கிற்கு 25 வயது இருக்கும் போது அவர் தனது நீண்ட நாள் காதலியான யாஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பின்னர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அவர்கள் திருமண விவாகரத்து பெற்றனர்.

கார்த்திகை தீபம் 2:

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட கார்த்திகை தீபம் சீரியலானது 600க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் சீரியலின் 2ஆவது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கார்த்திக் ராஜ் தனது மாமா வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரது 2ஆவது மகள் ரேவதியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கோயில் கும்பாபிஷேகத்திற்காக தனது பாட்டியின் ஊருக்கு குடும்பத்தோடு வந்துள்ளார். இந்த நிலையில் தான் கார்த்திக் ராஜினி நிகர சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் விஷூவல் டிசைனில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு சேர்ந்தார். இதே போன்று கார்த்திகை தீபம் 2 சீரியலில் நடித்து வரும் கார்த்திக்கிற்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் அவருக்கு தான் சம்பளம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.