இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், அன்புமணி ராமதாஸ், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி, ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:31 PM (IST) Jun 20
மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
11:29 PM (IST) Jun 20
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அடுத்தக்கட்ட போட்டிகள் நெல்லையில் நாளை தொடங்குகின்றன. இதற்கு டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது? என்பது குறித்து பார்க்கலாம்.
11:17 PM (IST) Jun 20
பிஎஸ்என்எல் தனது குவாண்டம் 5G (Q-5G) சேவையை ரூ.999 முதல் மலிவு விலையில், சிம் இல்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் மற்றும் Vi-யின் 5G ஆதிக்கத்திற்கு இது பெரும் சவாலாக அமையும்.
11:10 PM (IST) Jun 20
ஜியோவின் ரூ.3599 ஆண்டுத் திட்டம், அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2.5ஜிபி டேட்டா, 90 நாட்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் 50ஜிபி ஜியோ கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவற்றை வழங்கி, மாதாந்திர ரீசார்ஜ் சிரமங்களை நீக்குகிறது.
11:02 PM (IST) Jun 20
தேர்தல்களில் மொபைல் அடிப்படையிலான இ-வாக்கெடுப்பை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாகிறது. பாதுகாப்பான ஆண்ட்ராய்டு செயலி மூலம் அனைவரும் எளிதாக வாக்களிக்கலாம்.
10:55 PM (IST) Jun 20
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் நடித்து வரும் நடிகைகளின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது.
10:51 PM (IST) Jun 20
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இந்த நாடு தடை விதிக்க உள்ளது. வயது சரிபார்ப்பு சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, குழந்தைகள் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய நகர்வாகும்.
10:49 PM (IST) Jun 20
டிசம்பர் 2024 முதல், டெல்லியின் எரிபொருள் நிலையங்களில் உள்ள 500 ANPR கேமராக்கள் 3.36 கோடி வாகனங்களை திரையிட்டு, 4.90 லட்சம் காலாவதியான வாகனங்களை அடையாளம் கண்டுள்ளன.
10:42 PM (IST) Jun 20
தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களை விட மாட்டோம் என அதிமுகவினருக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
10:19 PM (IST) Jun 20
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட மாடல் Y காரை இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் விலை, வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் தவிர்த்து, $56,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
09:57 PM (IST) Jun 20
நைஜீரியாவில் ஒரு பல்கலைக்கழகம் மாணவிகள் தேர்வு எழுத பிரா அணிவது கட்டாயம் என வினோத விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
09:35 PM (IST) Jun 20
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளனர். ரசிகர்கள் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
08:50 PM (IST) Jun 20
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
08:47 PM (IST) Jun 20
டாடா ஹாரியர் EV AWD மாடல் 'க்வாட் டே' நிகழ்வில் தனது திறமையை வெளிப்படுத்தியது. எந்த சாலையிலும் எளிதாக பயணித்து, மின்சார காரும் இவ்வளவு வலிமையானதா என்று ஆச்சரியப்பட வைத்தது. ஹாரியர் EV சிறப்புகள், மைலேஜ், விலை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வோம்.
08:15 PM (IST) Jun 20
மத்திய பிரதேசத்தில் இளைஞரை கடித்த ஒரு விஷப் பாம்பு உயிரிழந்தது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
08:15 PM (IST) Jun 20
குழு வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளில் "கை உயர்த்தும்" அம்சத்தை WhatsApp உருவாக்கி வருகிறது. இது குறிப்பாக பெரிய குழுக்களில், தடையின்றி உரையாடல்களை மேம்படுத்தி, குறுக்கீடுகளைக் குறைக்க உதவும்.
07:50 PM (IST) Jun 20
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படத்தால் தனது தென்னிந்திய திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மனிஷா கொய்ராலா வேதனையுடன் பேசியுள்ளார்.
07:41 PM (IST) Jun 20
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய ஈரானை கண்டிக்க வேண்டும் என்று ஐநாவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
07:05 PM (IST) Jun 20
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.
06:47 PM (IST) Jun 20
மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த கார் இந்தியாவில் வெற்றிகரமாக 20வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
06:21 PM (IST) Jun 20
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியில் டக் அவுட் ஆனார். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
06:19 PM (IST) Jun 20
தமிழ் திரையுலகில் ஆகச்சிறந்த பாடலாசிரியராக வலம் வந்த நா.முத்துக்குமார் இறக்கும் வரை கரும்பை சாப்பிட்டதே இல்லையாம். அதற்கு பின்னால் உள்ள சோகக் கதை குறித்து பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கியுள்ளார்.
06:13 PM (IST) Jun 20
முகத்தில் இருக்கும் பருக்கள் கரும்புள்ளிகளை இயற்கையாகவே நீக்க உருளைக்கிழங்கை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
05:55 PM (IST) Jun 20
ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மிகப்பெரிய தரவு மீறலை அம்பலப்படுத்தினர், இது 16 பில்லியன் உள்நுழைவு சான்றுகள், கடவுச்சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை முக்கிய ஆன்லைன் தளங்களில் இருந்து கசியவிட்டது.
05:22 PM (IST) Jun 20
முடி உதிர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதை சரி செய்வதற்கு கற்றாழை மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் கற்றாழையை வழக்கமான முறையில் இல்லாமல் சில குறிப்பிட்ட முறைகளில் பயன்படுத்தினால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
05:15 PM (IST) Jun 20
2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
05:09 PM (IST) Jun 20
தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ‘குபேரா’ திரைப்படம் பற்றி பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தனது விமர்சனங்களை கூறியுள்ளார்.
04:49 PM (IST) Jun 20
பல காய்கறிகளை ஜூஸ் செய்து குடிப்பதால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கிறது. நீர்ச்சத்துள்ள காய்கள் மட்டுமின்றி நாம் சாதாரணமாக நினைக்கும் சில பொரியல் காய்கறிகளையும் கூட ஜூஸ் செய்து குடிப்பதால் நரம்பு, எலும்பு மண்டலங்கள் பலப்படும்.
04:45 PM (IST) Jun 20
தமிழ்நாட்டில் 4 புதிய கலை அறிவியல் கல்லுரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
04:26 PM (IST) Jun 20
மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக அரிசி, பருப்பில் சீக்கிரமாகவே பூச்சி வண்டுகள் வந்துவிடும். ஆகவே, அவை தடுப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
04:19 PM (IST) Jun 20
சிலருக்கு மீனை விட கருவாடு மிகவும் பிடிக்கும். ஆனால் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதால் இது உடலுக்கு கெடுதல் என பலரும் சொல்லுவது உண்டு. உண்மையில் கருவாடு அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
04:12 PM (IST) Jun 20
தமிழ்நாட்டின் ஏற்காடு மற்றும் ஏலகிரி மலைப்பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த ரோப் வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடப்பட்டு, சாத்தியக்கூறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
04:08 PM (IST) Jun 20
04:05 PM (IST) Jun 20
திரில்லர் படங்கள் பார்வையாளர்களை இருக்கையில் நுனியில் அமர வைக்கும் படங்களாகும். இத்தகைய படங்களில் மர்மங்கள், திருப்பங்கள், சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும். அந்த வகையில் இந்தியாவில் வெளியான சில க்ரைம் வெப் சீரிஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:03 PM (IST) Jun 20
உடல் எடையை வேகமாகவும், அதே சமயம் ஆரோக்கியமாகவும், இயற்கையான முறையிலும் குறைக்க வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம். அப்படி ஒரு பொருளை நீங்களும் தேடினால் இந்த 3 பொருட்களை தினமும் தண்ணீர் சேர்த்து குடிங்க. செம ஸ்லிம் ஆகிடுவீங்க.
04:01 PM (IST) Jun 20
மைலேஜ், வசதி மற்றும் பராமரிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் உணவு டெலிவரிக்கு ஏற்ற பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
03:44 PM (IST) Jun 20
சமையலுக்கு சுவை மட்டுமல்ல நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. சமையலுக்கு ஒரு சில எண்ணெய்களை தினசரி பயன்படுத்தினால் நம்முடைய உடலுக்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும்.
03:41 PM (IST) Jun 20
03:30 PM (IST) Jun 20
விவோ Y400 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 7300 சிப்செட் மற்றும் 5,500mAh பேட்டரியுடன் வருகிறது. 90W ஃப்ளாஷ்சார்ஜ் வசதியும் இதில் உள்ளது. இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.
03:29 PM (IST) Jun 20
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.