- Home
- Sports
- Sports Cricket
- TNPL 2025: நெல்லையில் நாளை போட்டிகள் தொடக்கம்! டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது?
TNPL 2025: நெல்லையில் நாளை போட்டிகள் தொடக்கம்! டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது?
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அடுத்தக்கட்ட போட்டிகள் நெல்லையில் நாளை தொடங்குகின்றன. இதற்கு டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது? என்பது குறித்து பார்க்கலாம்.

TNPL 2025 Matches Start Tomorrow In Tirunelveli
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், பல தனிப்பட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டங்கள் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 8 அணிகள் பங்கேற்கும் 32 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டங்கள் திருநெல்வேலி சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், கடந்த ஆண்டு ரன்னர்-அப் ஆன லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
டிஎன்பிஎல் அடுத்தக்கட்ட ஆட்டம் நெல்லையில் தொடக்கம்
திருநெல்வேலியில் ஜூன் 21 முதல் 26 வரை ஏழு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை இரட்டைப் போட்டிகள் நடக்க உள்ளன. திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை district.in என்ற இணையதளத்திலும், TNPL செயலி மற்றும் இணையதளத்திலும் ஆன்லைனில் வாங்கலாம். அதேபோல, மைதானங்களிலும் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பிளேஆஃப்களுக்கு தகுதி
இதற்கிடையில், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கடந்த வியாழக்கிழமை சேலம் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தங்களின் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து, 2025 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக நுழைந்துள்ளது. எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
படுமோசமான நிலையில் கோவை
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் பிளேஆஃப் இடங்களுக்கான போட்டியில் தீவிரமாக உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ் நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியையும், கோவை கிங்ஸ் நான்கு போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியையும் பெறவில்லை.
அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்?
ஐடரீம திருப்பூர் தமிழன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா (298 ரன்கள்) நான்கு போட்டிகளில் நான்கு அரை சதங்களை அடித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான அபிபஸ் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் (CSG) இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை (12) வீழ்த்தி, கேய் பர்பிள் தொப்பியை வென்றதோடு, போட்டியின் சிறந்த விக்கெட் வீழ்த்தியவராகவும் உள்ளார்.
சச்சின் ரதி, லோகேஷ் ராஜ் அசத்தல்
கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற மற்ற சிறப்பான தனிநபர் ஆட்டங்களில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சச்சின் ரதி (NRK) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டி.டி. லோகேஷ் ராஜ் (CSG) ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளையும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் சூர்யா ஆனந்த் (SMP) ஒரு ஓவரில் ஹாட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் சொல்வது என்ன?
சனிக்கிழமை, நெல்லை ராயல் கிங்ஸ் அணி பிளேஆஃபக்குள நுழைவதை நோக்கமாகக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் கோவை கிங்ஸ் தங்களது வெற்றி இல்லாத போக்கை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்.
"நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை, ஒரு நேரத்தில் ஒரு போட்டி மட்டுமே எங்கள் கவனம்" என்று நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் கே.பி. அருண் கார்த்திக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஷாருக்கான் நம்பிக்கை
"இது எங்கள் சொந்த மைதானம், எங்களுக்கு நிலைமைகள் தெரியும், குறிப்பாக காற்று, மேலும் எங்களுக்கு உள்ளூர் ஆதரவு உள்ளது" என்றும் அவர் கூறினார்.
அதே போல், லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஐபிஎல் நட்சத்திரமான ஷாருக்கான் கூறுகையில், "மெகா ஏலத்திற்குப் பிறகு இது ஒரு புதிய அணி. அடுத்த மூன்று ஆட்டங்களில் நாங்கள் வென்றால், நான்காவது பிளேஆஃப் இடத்திற்கான போட்டியில் நாங்கள் இருக்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.