TNPL 2025 Madurai vs NRK Match Results : நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2025 தொடரின் 16ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.
டிஎன்பிஎல் - சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ்
TNPL 2025 Madurai vs NRK Match Results : நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது த்ரில் வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி - 168 ரன்கள்
அதன்படி சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாலசந்தர் அனிருத் 48 ரன்கள் எடுத்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும், யுதீஸ்வரன் மற்றும் இம்மானுவேல் செரியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்தது.
அருண் கார்த்திக் அபாரம்:
இதில், தொடக்க வீரர் அஜிதேஷ் குருசாமி 0 ரன்னில் ஆட்டமிழக்க, சந்தோஷ் குமார் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட அரைசதம் அடித்தார். ஆனால், அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரித்விக் ஈஸ்வரன் 25 ரன்கள் எடுக்க, சோனு யாதவ் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நெல்லை ராயல் கிங்ஸ் தோல்வி
மற்ற வீரர்கள் யாரும் ரன்கள் அடிக்கவில்லை. கடைசியில் வந்த பின் வரிசை வீரர்கள் வரிசையாக டக் அவுட்டில் வெளியேறினர். இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 20 ஓவகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக நெல்லை ராயல் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. மதுரை சீகம் பாந்தர்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.குர்ஜப்னீத் சிங், சரவணன், ராஜலிங்கம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
