விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.
Jana Nayagan Movie Update:
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாலும், இந்த படம் விஜயின் கடைசி திரைப்படம் என்பதாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், வரலெட்சுமி சரத்குமார், மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்ட மிகப்பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் கடைசி படம்
இந்த படம் சமூக அரசியல் பின்னணி கொண்ட படமாகும் அரசியல் தலைவராக விஜய் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு சராசரி இளைஞன் அரசியல் சூழல், போலீஸ் மற்றும் அடக்குமுறைக்கு மத்தியில் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பயணத்தைப் பற்றியதாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த படம் 2026 ஜூன் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி உரிமையை அமேசான் பிரைமும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவியும் பெற்றுள்ளன. விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படக்குழு படத்தின் வெளியீட்டுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
‘ஃபர்ஸ்ட் ரோர்’ கிளிம்ப்ஸ் வீடியோ
இந்த நிலையில் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃபர்ஸ்ட் ரோர்’ என்கிற தலைப்பில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
