நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போ ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

Jana Nayagan Glimpse Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படம், விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன் அவர் நடிக்கும் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எச். வினோத் இயக்கும் இந்த அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் கிளிம்ப்ஸ் ரிலீஸ் எப்போ?

லேட்டஸ்ட் தகவல்களின்படி, 'ஜனநாயகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நடிகர் விஜய்யின் 51வது பிறந்தநாளான வருகிற ஜூன் 22 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ, படத்தின் கதைக்களம், ஆக்‌ஷன் காட்சிகள் குறித்த ஒரு ஐடியாவை ரசிகர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான பாதுகாப்புடன், பெரிய விளம்பரம் இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது. கடைசி நாளில், விஜய் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், ஆனால் பெரிய கொண்டாட்டங்களைத் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

'ஜனநாயகன்' படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.55 கோடிக்கும், ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் ரூ.121 கோடிக்கும் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ் சினிமாவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. 2023 இல் வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படம் 'பகவந்த் கேசரி'யில் இடம்பெற்ற 'குட் டீச் பேட் டீச்' என்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு முக்கிய காட்சி 'ஜனநாயகன்' படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிக்காக அப்படத்தின் ஒட்டுமொத்த ரீமேக் உரிமையையும் ரூ.4.5 கோடிக்கு தயாரிப்பாளர்கள் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் ஆக நடிக்கும் விஜய்

படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜு, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 2002ல் வெளியான 'தமிழன்' படத்திற்குப் பிறகு நடிகை ரேவதி 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு பிரதீப் இ. ராகவ். ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் லீக் ஆன அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் மூலம் லீக் ஆனது.