'ஜனநாயகன்' படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே
‘ஜனநாயகன்’ படம் குறித்து பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- FB
- TW
- Linkdin
Follow Us

Jana Nayagan Movie Update:
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69-வது திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. எச்.வினோத் ஏற்கனவே ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். தனது படங்களின் மூலம் எதார்த்தமான கதைக்களங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை கையாளுவதில் பெயர் பெற்றவர் என்பதால் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அது போன்ற ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் இந்த படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கும் நடிகர்கள்
இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படம் அரசியல் சார்ந்த கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது தலைப்பை பார்க்கும் போதே தெரிகிறது. ‘ஜனநாயகன்’ சமூக நீதி மற்றும் தலைமைத்துவம் பற்றி பேசும் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
ரிலீஸ்க்கு முன்பே மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’
இந்தப் படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் ‘ஜனநாயகத்தின் டார்ச் பீரர்’ (Torch Bearer of Democracy) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இது ஒரு புரட்சிகரமான கதாபாத்திரமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது. விஜயின் அரசியல் பயணத்திற்கு ஏற்ற வகையில் ஒரு சிறந்த படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யகதீஷ் பழனிச்சாமி மற்றும் லோகித் ஆகியோர் இணைந்து கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்து வருகின்றனர். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் சுமார் ரூ.180 கோடி வரை வியாபாரம் ஆகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2026 தேர்தலுக்கு அடித்தளம் அமைக்கும் விஜய
டிவி உரிமையை சன் டிவி ரூ.55 கோடிக்கும், ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.121 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல் கசிந்துள்ளன. ரிலீஸ்க்கு முன்பே ஒரு படம் இந்த அளவிற்கு வசூலை குவித்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2026 தேர்தலில் விஜய் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்பதால், அவரது அரசியல் பயணத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது பூஜா ஹெக்டேவும் படத்தின் படப்பிடிப்புகளை முடித்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அறிவித்திருக்கிறார். ‘ஜனநாயகன்’ படத்தில் தனது போர்ஷன் முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக சற்று முன் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். ஜனநாயகன்படத்தின் அப்டேட்டை பூஜா ஹெக்டே கொடுத்த நிலையில் #Poojahegde என்கிற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ அல்லது வேறு ஏதாவது அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.