2026 ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்படும். மேலும், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS கட்டாயமாக்கப்படும்.
இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்டுகள் வழங்க மத்திய அரசு உத்தரவு
புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, அதனுடன் இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS (Anti-lock Braking System) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் எடுத்த முக்கியமான நடவடிக்கையாக இதை கூறியுள்ளது.
ஹெல்மெட்டுகள் வழங்குவது அவசியம்
முந்தைய காலங்களில், வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கி வந்தனர். ஆனால், இருசக்கர வாகனங்களில் பெரும்பாலான நேரங்களில் இரு பேர் பயணம் செய்கிறார்கள். பயணியின் பாதுகாப்பும் முக்கியம் என்பதற்காகவே இரண்டு ஹெல்மெட்டுகள் கட்டாயமாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இது நடைமுறைக்கு வந்தால், பயணிகள் ஹெல்மெட் இல்லாமல் சாலையில் பயணிக்க வேண்டிய அவசியமே இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால் சாலை வித்துக்குளால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறையும்.
ABS அமைப்பின் அவசியம்
அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS (Anti-lock Braking System) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வாடிக்கையில் உள்ள இருசக்கர வாகனங்களில் சுமார் 40% வாகனங்களில் மட்டுமே ABS அமைப்பு உள்ளது. இதில் பெரும்பாலும் குறைந்த விலை வாகனங்களில் இத்தொழில்நுட்பம் சேர்க்கப்படவில்லை. இதனால் பலவிதமான விபத்துகள் ஏற்படுகின்றன. ABS உடன் கூடிய வாகனங்களில், தடம் தவறாமல் வாகனத்தை கையாண்டு விபத்துகளை தவிர்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் ABS பெரிதும் பயன்படுகிறது.
இந்த இரு நடவடிக்கைகளும் — இரண்டு ஹெல்மெட்டுகள் மற்றும் ABS கட்டாயம் — வாகன பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும். ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்து மரணங்கள் நிகழ்கின்றன, இதில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்களில் நடைபெறுகின்றன.
இருசக்கர வாகன பயணிகள் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தால், பலத்த தலையில் பாயும் தாக்கங்களை குறைக்க முடியும். அதேசமயம், ABS அமைப்பு வாகனங்களை சரியான நேரத்தில் நிறுத்தி விபத்துகளை தவிர்க்க உதவுகிறது. இந்த மத்திய அரசின் உத்தரவு, இந்திய சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்கான ஒரு புதிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் இந்த மாற்றங்களை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அரசின் நோக்கம், எதிர்காலத்தில் சாலை விபத்து எண்ணிக்கையை பெரிதும் குறைக்கும் என நம்பப்படுகிறது.
