பொதுவாக இரவு நேரங்களில், கார், பைக், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இரவு நேர பேருந்துகள், மற்றும் சொந்த பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். அதுவும் இரவு நேரங்களில் டிராபிக் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், 100 கிலோ மீட்டருக்கு குறைவாக வாகனங்கள் செல்வதில்லை.

இப்படி செல்லும் போது, அடிக்கடி... நாய்கள் மற்றும் மாடுகள் விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக மாடுகளால் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில், இது போல் நடு ரோடுகளில் அலைந்து கொண்டிருக்கும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது அம்மாநில அரசு.

அதாவது இரவில் திரிந்துகொண்டிருக்கும் மாடுகள் தலையில் சிவப்பு நிற லைட்டுகளை பொருந்தியுள்ளது. இதனால் தொலைவில் வரும் போதே வாகன ஓட்டிகள், அங்கு மாடுகள் உள்ளதை சுதாரித்து கொள்ள முடியும். மாடுகளால் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்கப்படும். உ.பி அரசின் இந்த முயற்சிக்கு விலங்கு ஆர்வலர்களிடம், மக்களிடமும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.