Asianet News TamilAsianet News Tamil

சாலை பாதுகாப்பு டி20 தொடரை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்.! சச்சின், பதான் பிரதர்ஸ் கொண்டாட்டம்.. வைரல் வீடியோ

சாலை பாதுகாப்பு டி20 தொடர் ஃபைனலில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி கோப்பையை வென்றது. சச்சின், பதான் பிரதர்ஸ் கோப்பையை வென்ற சந்தோஷத்தை கொண்டாடிய வீடியோ வைரலாகிவருகிறது.
 

india legends beat sri lanka legends in road safety world series final and wins trophy
Author
First Published Oct 2, 2022, 3:03 PM IST

சாலை பாதுகாப்பு டி20 தொடரின் ஃபைனலில் இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லஎஜண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்தியா லெஜண்ட்ஸ் அணி:

நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுஃப் பதான், இர்ஃபான் பதான், ராஜேஷ் பவார், ராகுல் சர்மா, அபிமன்யூ மிதுன், வினய் குமார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்னில் நடையை கட்டினார். 4ம் வரிசையில் இறங்கிய வினய் குமார் 21 பந்தில் 36 ரன்கள் அடித்தார். யுவராஜ் சிங் 13 பந்தில் 19 ரன்கள் அடித்தார்.

ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று தொடக்கம் முதலே அடித்து ஆடிய தொடக்க வீரர் நமன் ஓஜா சதமடித்தார். அதிரடியாக ஆடி பவுண்டர்களாக விளாசி சதமடித்த நமன் ஓஜா, 71 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 108 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 195 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 196 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.

196 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியில் பின்வரிசையில் ஆடிய இஷான் ஜெயரத்னே மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 51 ரன்கள் மட்டுமே அடித்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 18.5 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி கோப்பையை வென்றது.

சச்சின் டெண்டுல்கர், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் ஆகியோர் கோப்பையை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios