இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:04 AM (IST) May 16
பத்தாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் என்று குழப்பமா? ஆர்வம், திறமை, எதிர்கால இலக்குகள், பாடங்கள், உயர்கல்வி, வேலைவாய்ப்பு உட்பட 10 முக்கிய காரணிகளை கவனியுங்கள்!
11:57 PM (IST) May 15
1xBet நிறுவனம் 2025 முதல் காலாண்டில் இந்தியாவில் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையில் 68% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. புதிய விளையாட்டுகள், நேரடி கேசினோ சலுகைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
11:49 PM (IST) May 15
யுபிஎஸ்சி தேர்வு அட்டவணை 2026 வெளியானது! சிவில் சர்வீஸ் முதல்நிலை மே 24, முதன்மை ஆகஸ்ட் 21 முதல். என்டிஏ, சிடிஎஸ் மற்றும் பிற தேர்வு தேதிகளை இங்கே பார்க்கவும்.
11:34 PM (IST) May 15
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவது தொடர்பான வழக்கில், ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் அல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11:28 PM (IST) May 15
சி.யு.இ.டி. யுஜி 2025 நேர வழிகாட்டுதல்கள், ஆவணங்கள், உடை, நேரத்தை சரிபார்த்து தேர்வு நாள் சிக்கல்களை தவிர்க்கவும். அனுமதி அட்டையை உடனே பதிவிறக்கவும்!
11:11 PM (IST) May 15
விவோ V50 எலைட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்னாப்டிராகன் 7 Gen 3, 6000mAh பேட்டரி, ZEISS கேமராவுடன். மே 15 முதல் Flipkart-ல் கிடைக்கும். சலுகைகளை பார்க்கவும்!
10:52 PM (IST) May 15
மே 17 இல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடருக்கு மழை அச்சுறுத்தல். ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆர்சிபி-கேகேஆர் போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்?
10:49 PM (IST) May 15
2025ல் டெக் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு! செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமா? இன்டெல், மைக்ரோசாப்ட், மெட்டா உட்பட பல நிறுவனங்கள் பணிநீக்கம்.
10:30 PM (IST) May 15
ஐபிஎல் 2025 மே 17 முதல் ஆரம்பம்! அனைத்து போட்டிகளையும் பார்க்க இலவச ஜியோ ஹாட்ஸ்டார் உடன் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள். உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்!
10:13 PM (IST) May 15
ஏர்டெல் மின்னஞ்சல், ஓடிடி, எஸ்எம்எஸ்-களில் நிகழ்நேர மோசடிகளைத் தடுக்க அதிநவீன AI தீர்வை அறிமுகப்படுத்துகிறது. இது அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக கிடைக்கும்.
10:03 PM (IST) May 15
துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குலு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அங்காராவிலும் உணரப்பட்டது.
09:40 PM (IST) May 15
09:17 PM (IST) May 15
08:40 PM (IST) May 15
தமிழக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாளை (16.05.2025) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளன.
08:19 PM (IST) May 15
நாட்டு எல்லையில் போர் சூழல் நிலவி வரும் நிலையில் கரூரைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு மாணவன் தான் சேமித்த பணத்தை ராணுவத்திற்கு வழங்கியுள்ளார்.
08:18 PM (IST) May 15
சிக்கன், மட்டன் சாப்பிட்டு போரடித்து விட்டது, வித்தியாசமாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் ஒருமுறை கல்யாண வீட்டு டேஸ்ட்டில் வாழைக்காய் பொரியல் செய்து பாருங்க. அப்புறம் சிக்கன், மட்டனையே மறந்துடுவீங்க.
07:59 PM (IST) May 15
காரசாரமாக, அதிக சுவையாக சாப்பிட நினைக்கிறீர்கள் என்றால் வீட்டில் சட்டென இந்த கார சட்னியை செய்து சாப்பிட்டு பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து வகையான டிபனுக்கும் ஏற்ற செம காம்போவாக இந்த கார சட்னி இருக்கும்.
07:35 PM (IST) May 15
07:31 PM (IST) May 15
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் யோக, வாக்கிங் செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்கிறார்கள். அனைவராலும் இரண்டும் செய்ய முடியாது. இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் எது சிறந்தது, எதை செய்தால் சர்க்கரை அளவை பாதுகாக்கலாம்?
07:12 PM (IST) May 15
உடல் எடையை குறைக்க பல வழிகளையும் முயற்சி செய்து எதுவும் பலன் தரவில்லை என வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்க. இப்போதே வெந்தய டீ குடிக்க ஆரம்பிங்க. மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்க முடியும். அதுவும் ஆரோக்கியமான முறையிலேயே குறைக்கலாம்.
07:10 PM (IST) May 15
இந்திய அரசு, துருக்கிய தரைப்பணி நிறுவனமான செலபி விமான நிலைய சேவைகளுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்துள்ளது. தேசிய பாதுகாப்பின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
07:02 PM (IST) May 15
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்று பிரண்டை. இது கீரை வகைகளில் ஒன்று. இதை சுத்தம் செய்வது கடினம் என பலரும் சமைப்பது கிடையாது. ஆனால் வாரத்திற்கு ஒருமுறை இதை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
06:47 PM (IST) May 15
கோடை காலத்தில் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும் மிகச் சிறந்த பானங்களில் ஒன்று கேரட் மில்க் ஷேக். வெறும் 15 நிமிடத்திலேயே இதை சட்டென செய்து கொடுத்து விடலாம். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி குடிப்பாங்க.
06:31 PM (IST) May 15
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை சந்தித்து, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
06:16 PM (IST) May 15
கர்நாடகாவின் பிரபலமான உணவுகளில் அக்கி ரொட்டியும் ஒன்று. அரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இது மிக சிறந்த பிரேக் ஃபாஸ்ட். ஆரோக்கியமான அக்கி ரொட்டியை வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்தே சட்டென ஈஸியாக செய்து விடலாம்.
05:53 PM (IST) May 15
05:33 PM (IST) May 15
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கிரானா அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்தது. இந்தியாவும் மறுத்த நிலையில், பாகிஸ்தானில் எந்த அணுசக்தி நிலையத்திலிருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று IAEA தெரிவித்துள்ளது.
05:17 PM (IST) May 15
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3,490.35 கோடி மதிப்பீட்டில் 22,719 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.5,418.58 கோடி மதிப்பீட்டில் 47,419 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
05:10 PM (IST) May 15
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணியான திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் பிரதாப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
04:55 PM (IST) May 15
நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோருவும் காதலிப்பதாக பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் சமந்தா வெளியிட்ட செல்ஃபி, அவர்களின் உறவு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த செல்ஃபி அவர்களின் காதலை உறுதிப்படுத்துகிறதா?
04:49 PM (IST) May 15
இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50-ல் முக்கிய பங்குகள் உயர்ந்தன. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 1.5% க்கும் அதிகமாக உயர்ந்து, நிஃப்டி 25,000 புள்ளிகளை மீண்டும் எட்டியது.
04:16 PM (IST) May 15
பெரும் நிதி இழப்புக்கு பிறகு, நிசான் இந்தியாவை ஏற்றுமதி மையமாக மாற்றவும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை டஸ்டர், ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி மற்றும் மூன்று வரிசை எஸ்யூவி ஆகியவை இதில் அடங்கும்.
04:15 PM (IST) May 15
குழந்தை வளர்ப்பு குறித்து பெற்றோருக்கு சத்குரு சொல்லும் 5 விஷயங்களை இங்கு காணலாம்.
04:10 PM (IST) May 15
ஜப்பான் NCAP பாதுகாப்புத் தேர்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசுகி ஃப்ரோங்ஸ் 84% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. மோதல் பாதுகாப்பில் 76% மற்றும் தடுப்புப் பாதுகாப்பில் 92% மதிப்பெண்கள் பெற்று நான்கு நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.
04:09 PM (IST) May 15
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ) கடல் நீரை குடிநீராக்கும் புதிய நவீன வடிகட்டியை உருவாக்கியுள்ளது.
04:00 PM (IST) May 15
தமிழகத்தில் இன்று முதல் மே 18 வரை பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03:59 PM (IST) May 15
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
03:34 PM (IST) May 15
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்ட கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறது
03:14 PM (IST) May 15
பயங்கரவாத இலக்குகளை இந்தியா துல்லியமாக குறிவைத்து தாக்கியதாகவும், சமீபத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பயந்து நாய் போல ஓடியதாகவும் பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
03:06 PM (IST) May 15
பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல், வாரிசுதாரர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளதால், தமிழக அரசு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.