MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! எத்தனை மணிக்கு.? எந்த இணையதளத்தில் பார்க்கனும்.?

10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! எத்தனை மணிக்கு.? எந்த இணையதளத்தில் பார்க்கனும்.?

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படும். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 15 2025, 09:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Image Credit : our own

10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

கல்வி தான் மாணவன் நல்வழிப்படுத்தும், அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர் படித்த படிப்பிற்கு அங்கீகாரம் கொடுப்பது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. அந்த வகையில் கடந்த இரண்டு மாதம் தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்துள்ளனர். 

இதன் படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இந்தாண்டு முன்கூட்டியே கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

24
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்
Image Credit : our own

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்

ஆனால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நாளை (மே 16ஆம் தேதி ) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 10ஆம் வகுப்பு தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியுள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை 7557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதினர்.

Related Articles

Related image1
12th Supplementary Exam: 12ம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை!
Related image2
TNPSC Group 2 Exam Result: 53 நாட்களில் வெளியான தேர்வு முடிவு
34
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியீடு
Image Credit : Google

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எத்தனை மணிக்கு வெளியீடு

இந்த நிலையில் நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகள் காலை 9 மணி முதல் இணையதள முகவரி- https://results.digilocker.gov.in www.tnresults.nic.in இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவு நாளை (16.05.2025 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படும் எனவும் இந்த இணையதள முகவரி- https://results.digilocker.gov.in www.tnresults.nic.in தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

44
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி.?
Image Credit : Social Media

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி.?

தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவுசெய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தேர்வு
தமிழ்நாடு கல்வி
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
12th Supplementary Exam: 12ம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை!
Recommended image2
TNPSC Group 2 Exam Result: 53 நாட்களில் வெளியான தேர்வு முடிவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved