MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர்களுக்கு 53ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு.! அசத்தலான திட்டத்தை வெளியிட்ட தமிழக அரசு

மகளிர்களுக்கு 53ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு.! அசத்தலான திட்டத்தை வெளியிட்ட தமிழக அரசு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3,490.35 கோடி மதிப்பீட்டில் 22,719 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.5,418.58 கோடி மதிப்பீட்டில் 47,419 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. 

2 Min read
Author : Ajmal Khan
Published : May 15 2025, 05:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TN நகர்ப்புற வீட்டுவசதி வாரியம் 4 ஆண்டு சாதனை
Image Credit : our own

TN நகர்ப்புற வீட்டுவசதி வாரியம் 4 ஆண்டு சாதனை

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை இன்று (15.5.2025) திறந்து வைத்து குறும்படத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். அதனை தொடர்ந்து

ஆய்வு கூட்டத்தில் பேசுகையில் அரசு பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டில் ரூ.3,490.35 கோடி மதிப்பீட்டில் 65 திட்டப்பகுதிகளில் 22.719 குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட திட்டங்களில், பல பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.5.418.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த 47,419 அடுக்குமாடி குடியிருப்புகளின் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

25
மகளிர் பெயரில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீடு
Image Credit : Asianet News

மகளிர் பெயரில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீடு

கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள் முதல்வர் உத்தரவின் படி மகளிர் பெயரில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கி அவர்களை சமூகத்தில் மதிப்புமிக்கவர்களாக மாற்றியுள்ளது. மறுகட்டுமான திட்டத்தின் கீழ் குடியிருப்புதாரர்கள் இடம்பெயர வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.8000/- த்தினை ரூ.24,000/- மாக உயர்த்தி இதுவரை 10,081 குடும்பங்களுக்கு ரூ.23.96 கோடி கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பொது மக்களிடம் கொண்டு செல்ல 4 ஆண்டு சாதனை புகைப்படக் காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
International Women's Day 2025! பெண்களுக்கான டாப் 6 கல்வி உதவித்தொகை லிஸ்ட்: உடனே அப்ளே பண்ணுங்க
Related image2
Adani House | உங்களுக்கு அம்பானி வீடு மட்டும் தானே அதானி வீடு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
35
75 ஆயிரம் குடியிருப்புகள் புனரமைப்பு
Image Credit : our own

75 ஆயிரம் குடியிருப்புகள் புனரமைப்பு

அறிவிக்கப்பட்டுள்ள மறுகட்டுமான திட்டப்பகுதிகளில் கருணைத் தொகை வழங்குவது, வீடுகளை காலி செய்வது, குடியிருப்புகளை இடிப்பது, ஆகிய பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். பழுது பார்ப்பது மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை புனரமைக்கப்பட வேண்டி உள்ளது. எனவே, தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

100 சதவிகிதம் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பகுதிகளில் குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்றி திறப்பு விழாவிற்கு கொண்டு வரவேண்டும்.

45
புதிய கட்டிடங்களை விரைந்து முடிக்க உத்தரவு
Image Credit : our own

புதிய கட்டிடங்களை விரைந்து முடிக்க உத்தரவு

திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள திட்டப்பகுதிகளை தலைமைப் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழாவிற்கு கொண்டு வர வேண்டிய திட்டப்பணிகளை தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை வல்லுநர்கள் குழுக்கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட வேண்டும். திறந்து வைக்கப்பட்ட திட்டப்பகுதிகள் முடியும் தருவாயில் உள்ள திட்டப்பகுதிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

55
குடியிருப்புதாரர்களிடமிருந்து தவணைத் தொகை வசூல்
Image Credit : our own

குடியிருப்புதாரர்களிடமிருந்து தவணைத் தொகை வசூல்

மேலும் MUDP, TNUDB மனைகளுக்கு கிரையப்பத்திரம் வழங்குவதற்கு அந்தந்த திட்டப்பகுதிகளிலேயே முகாம்கள் நடத்தப்பட வேண்டும். வாரிய குடியிருப்புதாரர்களிடமிருந்து தவணைத் தொகைகளை காலம் தாழ்த்தாது வசூலிக்கப்பட வேண்டும். 

பணியாளர்கள் முழு அளவில் நியமிக்கப்பட்டுள்ளதால் தவணைத் தொகை வசூலிப்பதில் காலத்தாமதம் இனி இருக்கக் கூடாது இதனை வாரியப் பொறியாளர்கள் உடனுக்குடன் கவனித்து மேல்நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகார்களும் வராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பெண் அதிகாரம்
பெண்கள்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Related Stories
Recommended image1
International Women's Day 2025! பெண்களுக்கான டாப் 6 கல்வி உதவித்தொகை லிஸ்ட்: உடனே அப்ளே பண்ணுங்க
Recommended image2
Adani House | உங்களுக்கு அம்பானி வீடு மட்டும் தானே அதானி வீடு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved