MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Adani House | உங்களுக்கு அம்பானி வீடு மட்டும் தானே அதானி வீடு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Adani House | உங்களுக்கு அம்பானி வீடு மட்டும் தானே அதானி வீடு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கவுதம் அதானிக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. அதன் மதிப்பும், அவரது கார்ப்பரேட் ஹவுஸ், நிகர மதிப்பு, வணிகம் மற்றும் பலதகவல்களை இங்கே காணலாம். 

1 Min read
Dinesh TG
Published : Aug 13 2024, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானியின் வீடு டெல்லியின் உபேர் பகுதியில் அமைந்துள்ளது. அவரது அரண்மனை போன்று வீட்டில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவின் போது, ​​USIBC குளோபல் லீடர்ஷிப் விருதைப் பெற்ற கவுதம் அதானி, சோலார் மாட்யூல்கள், ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்கள் மற்றும் காற்றாலை டர்பைன் தயாரிக்கும் மூன்று Giga தொழிற்சாலைகளை விரைவில் அதானி குழுமம் கட்டும் என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டம் 2030ம் ஆண்டுக்குள் சுத்தமான எரிசக்திக்கான USD-70 பில்லியன் முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

25

கௌதம் அதானி இந்த அறிவிப்பை வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு சக தொழிற் போட்டியாளரான கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஐந்தாவது ஜிகா தொழிற்சாலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

35

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பணக்காரராக கௌதம் அதானி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.6,75,000 கோடி என்று கூறப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள கௌதம் அதானி வீட்டின் விலையின் சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக அது பல லட்சம் கோடிக்கணக்கில் இருக்கும் என்பதே உண்மை.

45

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கௌதம் அதானி டெல்லியின் லுட்யென்ஸில் ஒரு நூற்றாண்டு பழமையான பங்களாவை விலைக்கு வாங்கினார். 25000 சதுர அடியில் அமைந்த அந்த பங்களாவை அதானி குழுமம் 400 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளது.

கௌதம் அதானியின் வெற்றிக்கு காரணமே இவங்க தான்.. ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

55

கௌதம் அதானிக்கு சொந்தமாக சொகுசு கார்கள் மற்றும் பிரைவேட் ஜெட் விமானங்களும் உள்ளன. அவர் BMW 7 சீரிஸ், லிமோசின், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், சிவப்பு ஃபெராரி கலிபோர்னியா வகை கார்களும் அடங்கும். 2009 பாம்பார்டியர் சேலஞ்சர் 605, 2013 எம்ப்ரேயர் லெகசி 650, ஹாக்கர் 850XP மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் AW139 ஹெலிகாப்டர் ஆகியவை அடங்கும்.
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவில் பாதுகாப்பு திட்டங்களில் டெர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம்..!
Recommended image2
Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!
Recommended image3
நில மோசடிக்கு இனி வாய்ப்பே இல்லை.! பத்திரப்பதிவில் வந்தது அதிரடி மாற்றம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved