MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • கொத்து கொத்தாக வேலை.! இன்டர்வியூவிற்கு வந்தாலே ஜாக்பாட் தான்- தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

கொத்து கொத்தாக வேலை.! இன்டர்வியூவிற்கு வந்தாலே ஜாக்பாட் தான்- தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாளை (16.05.2025) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 15 2025, 08:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் வேலைவாய்ப்பு
Image Credit : social media

தமிழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் பேர் படிப்பை முடித்து வேலை தேடி பல ஊர்களுக்கு செல்கிறார்கள். எனவே வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறது. 

இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்ந வகையில், நாளை சென்னையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

24
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்
Image Credit : gemini Ai

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32. கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது

Related Articles

Related image1
Job Opportunities: வேலை தேடும் இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! எங்கு? எப்போது? இதோ முழு விவரம்!
Related image2
Job Tips: வேலையில் வெற்றிகரமாக செயல்பட வாரன் பஃபெட்டின் 10 ரகசியங்கள்! ஃபாலோ பண்ணுங்க!
34
வேலைவாய்ப்பு முகாமில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்.?
Image Credit : Asianet News

வேலைவாய்ப்பு முகாமில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்.?

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

 இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

44
செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு
Image Credit : stockphoto

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு

இதே போல செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும், இதில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளதாகவும், குறிப்பாக மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் உள்ள பிரபல நிறுவனத்தில் CLASSIC MAN POWER PVT LTD நிறுவனத்தில் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
எம்பிஏ, எம்சிஏ படிக்க ஆசையா? அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம் - மிஸ் பண்ணாதீங்க!
Recommended image2
ரூ.6.5 லட்சம் சம்பளம்.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வங்கி வேலை வாய்ப்பு
Recommended image3
Government Jobs: விவசாய பட்டதாரிகளா? ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் 10 சூப்பர் அரசு வேலைகள் இதோ!
Related Stories
Recommended image1
Job Opportunities: வேலை தேடும் இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! எங்கு? எப்போது? இதோ முழு விவரம்!
Recommended image2
Job Tips: வேலையில் வெற்றிகரமாக செயல்பட வாரன் பஃபெட்டின் 10 ரகசியங்கள்! ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved