Job Opportunities: வேலை தேடும் இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! எங்கு? எப்போது? இதோ முழு விவரம்!
Private Job Opportunities: தமிழக அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க மாவட்டம் தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 5ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு ெ வளியாகியுள்ளது. எங்கு எப்போது உள்ளிட்ட விரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய இளைஞர்கள் எப்படியாவது அரசு வேலையை வாங்கி விட வேண்டும் என போட்டா போட்டிக்கொண்டு படித்து வருகின்றனர். ஆனால் ஆயிரம் பேர் வேலைக்கு சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். எனவே அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை. இதனால் இன்றைய இளைஞர்களின் அரசு வேலை என்பது கனவாகவே இருந்து வருகிறது.
இன்னும் சில இளைஞர்கள் வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவை எடுக்கின்றனர். இந்நிலையில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தனியார் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டம் தோறும் வேலைவாய்பு முகாம்களை அரசே ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும். ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 05ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம். 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.