இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், ரெட் அலர்ட் எச்சரிக்கை, இந்தியா, ஈரான் - இஸ்ரேல் போர், உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:51 PM (IST) Jun 15
Kuberaa Ticket Price in Tamil : தனுஷ், ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிக்கும் 'குபேரா' ஜூன் 20ல் வெளியாகிறது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படம், டிக்கெட் விலையை உயர்த்தாமல் வெளியிடப்படுகிறது.
11:21 PM (IST) Jun 15
தேனீ கொட்டியதால் மாரடைப்பு ஏற்பட்டு தொழில் அதிபர் சஞ்சய் கபூர் உயிரிழந்துள்ளார். இப்படியும் மாரடைப்பு வருமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
10:48 PM (IST) Jun 15
Kuberaa Tamil Trailer Released : தனுஷ் நடித்து வெளியான இருக்கும் குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், குபேரா படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது.
10:32 PM (IST) Jun 15
கத்தாரை வீழ்த்தி 2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு BYD சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
10:02 PM (IST) Jun 15
ZS EV என்பது MG மோட்டாரின் முதல் முழு மின்சார வாகனமாகும், இது ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா BE 6 மற்றும் டாடா கர்வ் EV போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
09:46 PM (IST) Jun 15
ஓலா எலக்ட்ரிக்கின் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ என இரண்டு வகைகளில் வருகிறது, இதன் விலை ரூ.99,999 இல் தொடங்குகிறது.
09:31 PM (IST) Jun 15
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் XTEC, ஈர்க்கக்கூடிய மைலேஜ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் LED லைட்டிங் போன்ற நவீன அம்சங்கள் மற்றும் நம்பகமான எஞ்சின் ஆகியவற்றை வழங்குகிறது.
09:18 PM (IST) Jun 15
டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 13 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
09:07 PM (IST) Jun 15
சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அஜிலிசியம், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் 25 ஊழியர்களுக்கு புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டாவை பரிசாக வழங்கி 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
09:00 PM (IST) Jun 15
Kuberaa Trailer Released: தனுஷ் மற்றும் நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ள குபேரா படத்தின் டிரைலர் தற்போது குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டுள்ளது.
08:51 PM (IST) Jun 15
சீன காந்தங்களை நம்பியிருப்பதால், சீனாவின் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இந்தியாவின் வாகனத் துறையை, குறிப்பாக மின்சார வாகன உற்பத்தியை அச்சுறுத்துகின்றன. தாமதமான ஏற்றுமதிகள் மற்றும் உரிமத் தேவைகள் விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கின்றன.
08:28 PM (IST) Jun 15
அமெரிக்காவில் இருந்து ரூ.1.41 கோடி தங்கம் கடத்திய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும் கைதானார்.
07:40 PM (IST) Jun 15
டிஜிட்டல் கடன் தளங்கள் மூலம் ரூ.50,000 வரை விரைவான கடன்களைப் பெறுங்கள். நிமிடங்களில் ஒப்புதல் மற்றும் விரைவான பண விநியோகம். ஸ்மார்ட்போன் மற்றும் இணைய அணுகலுடன் எளிதான விண்ணப்பம்.
07:31 PM (IST) Jun 15
ஏர் இந்தியா விமான விபத்து 250க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த நிலையில், உலகின் மிக பாதுகாப்பான விமான நிறுவனங்கள் குறித்த முழு பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
07:28 PM (IST) Jun 15
Priyanka Deshpande and Start Music Season 6 : விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே காலில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
06:13 PM (IST) Jun 15
15வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கட்டமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஹில்லாங் யாஜிக் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
05:50 PM (IST) Jun 15
Kantara Movie Shooting Spot Accident : காந்தாரா படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டதாகவும், நடிகர் ரிஷப் ஷெட்டி உட்பட 30 பேர் உயிர் தப்பியதாகவும் வந்த செய்திக்கு தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே விளக்கமளித்துள்ளது.
05:42 PM (IST) Jun 15
05:36 PM (IST) Jun 15
Karthigai Deepam Naveen and Durga Marriage : கார்த்திகை தீபம் சீரியலில் துர்காவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் அவர் தான் காதலித்த நவீனை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
05:14 PM (IST) Jun 15
விஜய்க்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
04:20 PM (IST) Jun 15
Malavika Mohanan Shares The Worst Incident : நடிகை மாளவிகா மோகனன் மும்பை லோக்கல் ரயிலில் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இந்த கருத்துக்கு மும்பை போலீசார் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளனர்.
04:01 PM (IST) Jun 15
மின்சார ஸ்கூட்டர்கள் முதல் உள் எரிப்பு இயந்திரங்கள் வரை, 2025 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூட்டர்களைக் கண்டறியவும்.
03:58 PM (IST) Jun 15
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு சச்சின்-ஆண்டர்சன் பெயரிடும் நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் வீரர் பட்டோடி குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
03:45 PM (IST) Jun 15
03:06 PM (IST) Jun 15
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டிலேயே விலை குறைந்த 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
02:50 PM (IST) Jun 15
விஜய் டிவியின் ‘பொன்னி’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சபரி நாதனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
02:42 PM (IST) Jun 15
02:37 PM (IST) Jun 15
அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி, கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.
02:07 PM (IST) Jun 15
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை வீட்டிற்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
01:42 PM (IST) Jun 15
நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இணைந்துள்ள ‘அஃகேனம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
01:22 PM (IST) Jun 15
தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை அங்கீகார விதியில் மாற்றம் செய்யப்பட்டு, துல்லியம் 90% இல் இருந்து 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாகப் பெற்றுச் செல்ல முடிகிறது.
01:22 PM (IST) Jun 15
திருவாரூர் மாவட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இருவர், அவரை ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
01:00 PM (IST) Jun 15
ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாலிவுட் சினிமாவை கடுமையாக விமர்சித்து, போதைப்பொருட்கள், மதுபானம் மற்றும் தவறான செயல்களுக்கான கூடாரம் என்று சாடினார். நடிகர்களின் ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
12:33 PM (IST) Jun 15
12:14 PM (IST) Jun 15
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் முற்றிய நிலையில், கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
12:11 PM (IST) Jun 15
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
12:11 PM (IST) Jun 15
ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகிய நிறுவனங்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஒப்பிட்டு, எந்த நிறுவனம் சிறந்த பொழுதுபோக்கு சலுகைகள், டேட்டா மற்றும் 5G அணுகலை வழங்குகிறது என்பதை ஆராய்கிறது.
11:26 AM (IST) Jun 15
பாமக வழக்கறிஞர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11:12 AM (IST) Jun 15
தமிழில் பாட சின்மயிக்கு பிரபல இசையமைப்பாளர் வாய்ப்பளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை அந்த இசையமைப்பாளரே வெளியிட்டுள்ளார்.
11:09 AM (IST) Jun 15
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்புப் பணிகளில் தனது நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது. பி777 விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்புச் சேவை வழங்குவதாகக் கூறியுள்ளது.