நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இணைந்துள்ள ‘அஃகேனம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Akkenam Official Trailer
நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல்வாதி என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் அருண் பாண்டியன். தமிழில் ‘இளஞ்சோடிகள்’ என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது ‘ஊமை விழிகள்’ தான். இந்த படத்திற்குப் பின்னர் அவர் குறிப்பிட்ட நடிகராக அறியப்பட்ட அவர், ‘செந்தூரப்பூவே’, ‘காவியத்தலைவன்’, ‘பேராண்மை’, ‘வில்லு’, ‘அங்காடி தெரு’, ‘சவாலே சமாளி’ போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். ‘வேலைக்காரன்’, ‘மாயவன்’, ‘சர்க்கார்’, ‘விஸ்வாசம்’, ‘ரோமியோ’ போன்ற படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்திருக்கிறார்.
‘அஃகேனம்’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள்
அருண் பாண்டியனுக்கு கவிதா, கிரானா மற்றும் கீர்த்தி என்று மூன்று மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தி பாண்டியன் படங்களில் நடித்து வருகிறார். அவர் பிரபல நடிகர் அசோக் செல்வனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் பாண்டியன் இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்திற்கு ‘அஃகேனம்’ என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கே.உதய் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியனுடன் இணைந்து பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், ஆதித்யா மேனன், சீதா, ஆதித்யா ஷிவ்பிங்க், எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜூலை 4ம் தேதி வெளியாகும் ‘அஃகேனம்’
பரத் வீரராகவன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ‘அஃகேனம்’ படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரெய்லரை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர் படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விறுவிறுப்பான டிரெய்லர்
கார் டாக்ஸி டிரைவராக இருக்கும் கீர்த்தி பாண்டியன் சுற்றி பல பிரச்சனைகள் நடக்கிறது. அந்த பிரச்சனைகளிலிருந்து அவர் எப்படி மீள போகிறார் என்ற விறுவிறுப்புடன் டிரெய்லர் நகர்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

