Karthigai Deepam Naveen and Durga Marriage : கார்த்திகை தீபம் சீரியலில் துர்காவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் அவர் தான் காதலித்த நவீனை யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

Naveen and Durga Marriage in Karthigai Deepam Serial : ஜீ5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியலில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது கார்த்திகை தீபம். முதல் சீசனை வெற்றிகரமாக முடித்த நிலையில் இப்போது 2ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கார்த்தியின் முதல் மனைவி தீபம் இறந்த நிலையில் 2ஆவதாக தனது மாமாவின் மகள் ரேவதியை திருமணம் செய்து கொண்டார்.

தான் ராஜா சேதுபதியின் பேரன் என்பதை மறைத்து கார்த்திக் சாமூண்டீஸ்வரி வீட்டில் டிரைவராக வேலை பார்த்து சந்தர்ப்ப சூழல் காரணமாக ரேவதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஓரளவிற்கு ராஜா தான் ராஜா சேதுபதியின் பேரன் என்பது தெரிந்துவிட்டது. இன்னும் உறுதியாக தெரியவில்லை என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க சாமூண்டீஸ்வரி மற்றும் சிவாண்டியின் மோதல் மாறி இப்போது ராஜா மற்றும் சிவனாண்டி மோதல் என்று சீரியல் மாறிவிட்டது. அதுமட்டுமின்றி இப்போது தான் சீரியல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. ரேவதி மற்றும் கார்த்தியின் திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா புறப்பட்டு கையில் அடிபட்டு ரேவதி வீட்டிற்கு திரும்ப வந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார். சுவாதியை பாடல் பாடவைத்து அவரது திறமையை ராஜா வெளிப்படுத்தினார். மேலும், பிரச்சனையில் சிக்க இருந்த அவரை கார்த்தி காப்பாற்றினார். இப்போது சாமூண்டீஸ்வரியின் மகள்களான ரோகிணி, ரேவதி மற்றும் சுவாதி என்று எல்லோரும் கார்த்திக்கிற்கு ஆதரவாக இருக்கும் போது கடைசியாக துர்காவின் காட்சியும் இப்போது தொடங்கிவிட்டது.

அவருக்கும் கார்த்தி தான் இப்போது ஆதரவாக இருக்கிறார். நவீன் மற்றும் துர்கா இருவரும் காதலித்து வரும் நிலையில் சாமூண்டீஸ்வரி துர்காவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். இதெல்லாம் சிவனாண்டியின் பிளான் என்பது பற்றி தெரியாமல் சாமூண்டீஸ்வரி அந்த வலையில் சிக்கியுள்ளார். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் துர்கா நவீனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். வீட்டிற்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நவீனை ரகசிய திருமணம் செய்தார் துர்கா. இது கார்த்திக்கிற்கு தெரியவர அவரது உதவியை நவீன் மற்றும் துர்கா இருவரும் கேட்க அதற்கு முடியாது என்கிறார் கார்த்தி.

தனது அம்மாவின் விருப்பத்தை மீறி யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்த நிலையில் எங்கு தனது திருமணம் குறித்து அம்மாவிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகும் என்று யோசித்து துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்ய துணிந்துள்ளார். அந்த நேரம் பார்த்து ரேவதி வரவே என்ன நடக்க போகிறது என்பதை இனி பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏற்கனவே சாமூண்டீஸ்வரி பிடிவாத குணம் கொண்டவர் என்பதால் துர்கா திருமணம் செய்த நிலையில் இதைப் பற்றி அறிந்து சாமூண்டீஸ்வரி சுவாதியை தான் ஏற்பாடு செய்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடலாம் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக சுவாதிக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியில்லை என்றால் துர்காவே தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அம்மா பார்த்திற்கு மாப்பிள்ளையுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வார் என்று தெரிகிறது.