இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

02:37 PM (IST) Dec 30
குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்க குடிக்க வேண்டிய ஐந்து ஜூஸ்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
02:15 PM (IST) Dec 30
குலதெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்றால் குலதெய்வ கோயிலில் இருந்து ஐந்து பொருட்களை மறக்காமல் எடுத்து வர வேண்டும். அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:15 PM (IST) Dec 30
பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்ட ஆலையாக உருவெடுத்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள இந்த ஆலை, 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.
02:15 PM (IST) Dec 30
வேட்பாளர்களை அமித் ஷாவே நேரடியாக தேர்வு செய்வார். யாருடைய சிபாரிசும் இங்கே செல்லுபடி ஆகாது. இந்த முடிவுக்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் வியூகம் இருக்கிறது.
02:14 PM (IST) Dec 30
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்துவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரம் சாதிவாரி சர்வே நடத்த இல்லையா? என்று கேள்வி எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி சமூகநீதிக்கு திமுக தொடர்ந்து துரோகம் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
02:08 PM (IST) Dec 30
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புதிதாக நடிகை ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளார். ராணா எண்ட்ரிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த எண்ட்ரி அமைந்துள்ளது.
02:06 PM (IST) Dec 30
ஏற்காட்டில் காணாமல் போன சுமதி என்ற பெண், கள்ளக்காதலன் வெங்கடேஷால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. தொலைபேசி அழைப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சுமதியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை 600 அடி பள்ளத்தில் வீசியுள்ளார்.
02:03 PM (IST) Dec 30
பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்களும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
01:44 PM (IST) Dec 30
2026-ஆம் ஆண்டில் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, இக்கட்டுரை சிறந்த முதலீட்டு வழிகளை விவரிக்கிறது. அதன் மூலம் பணவீக்கத்தை வென்று, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஓய்வுக்காலம் போன்ற கனவுகளை நனவாக்க இந்த வழிகாட்டி உதவுகிறது.
01:27 PM (IST) Dec 30
பாபநாசம் அருகே கூலி வேலைக்கு சென்று திரும்பிய 65 வயது மூதாட்டியை, குடிபோதையில் இருந்த 46 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
01:09 PM (IST) Dec 30
2026 Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
01:01 PM (IST) Dec 30
குளிர்காலத்தில் இட்லி மாவை சீக்கிரமாக புளிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
12:53 PM (IST) Dec 30
பாரத் டாக்ஸி ஆப் என்ற புதிய அரசு ஆதரவு செயலி 2026 முதல் நாடு முழுவதும் அறிமுகமாகிறது. ஓலா, உபேர் போன்ற செயலிகளுக்கு மாற்றாக, 0% கமிஷன் மற்றும் உயர்வு விலை இல்லாத நியாயமான கட்டணத்தில் இது செயல்படும்.
12:50 PM (IST) Dec 30
நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வரும் நிலையில், அது தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் தயாராகிறதாம். அதன் ரிலீஸ் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
12:27 PM (IST) Dec 30
சரியான வரி திட்டமிடல் மூலம் வரிச்சுமையைக் குறைக்கலாம். ஓய்வூதிய முதலீடுகள், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள், வீட்டுக் கடன் போன்றவற்றுக்கான வரி விலக்குகளைப் பயன்படுத்துவது அவசியம்.
12:17 PM (IST) Dec 30
ரெஹான் மற்றும் அவிவாவின் திருமண தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், திருமணத்தைப் பற்றி அவர்களது குடும்பத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
12:13 PM (IST) Dec 30
ஒன்பிளஸ் நிறுவனம் 9,000mAh சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சீனாவில் ஒன்பிளஸ் டர்போ சீரிஸ் ஆகவும், உலகளவில் ஒன்பிளஸ் நார்ட் 6 சீரிஸ் ஆகவும் அறிமுகமாக உள்ளது.
12:09 PM (IST) Dec 30
ரஜினிகாந்தின் 173-வது படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் இயக்க இருப்பதாக பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு டிரெண்டிங் டிரைக்டர் வசம் அப்படம் சென்றிருக்கிறது.
12:00 PM (IST) Dec 30
இண்டிகோ நிறுவனம் தனது விமானிகளுக்கு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் பெரிய சம்பள உயர்வு மற்றும் புதிய அலவன்ஸ் கட்டமைப்பை அறிவித்துள்ளது. புதிய FDTL விதிமுறைகள் மற்றும் விமான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
11:59 AM (IST) Dec 30
திருத்தணி ரயில் நிலையம் அருகே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம்.
11:58 AM (IST) Dec 30
சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வது, துணைவேந்தரை நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பினார்.
11:44 AM (IST) Dec 30
Kendra Drishti Yog: 2025 ஆம் ஆண்டின் கடைசி சனி-புதன் சேர்க்கை டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
11:38 AM (IST) Dec 30
சென்னையில் அறிமுகமான 'டிஜிட்டல் ஸ்டிக்' மாடு மேய்க்கும் தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கால்நடை மேலாண்மையை எளிதாக்கி, மேய்ச்சல் தொழிலை ஒரு 'ஹைடெக்' தொழிலாக மாற்றுகிறது.
11:34 AM (IST) Dec 30
சென்னையில் நடைபெற்ற மதி உணவுத் திருவிழா, சுய உதவிக் குழுக்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது. 8 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், 4.5 இலட்சம் மக்கள் வருகை தந்து, ரூ.2.56 கோடி மதிப்பிலான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
11:22 AM (IST) Dec 30
கலெக்ஷன் ஆகிறதோ? இல்லையோ? தினமும் 15 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அந்த கம்பெணிக்கு கொடுத்தே ஆக வேண்டும்.
10:58 AM (IST) Dec 30
நடைப்பயிற்சி மூலம் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய ஐந்து எளிய வழிகளை குறித்து இங்கு பார்க்கலாம்.
10:56 AM (IST) Dec 30
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ரெளடிகளின் எதிர்ப்பை மீறி கடையை திறந்துவிடுகிறார். கடை திறப்புக்கு முன்னர் காத்திருக்கும் ட்விஸ்ட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:44 AM (IST) Dec 30
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.23,000 சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர், ஆனால் இல்லத்தரசிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை இந்த கட்டுரை ஆராய்கிறது.
10:26 AM (IST) Dec 30
மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் இடையே உள்ள புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
10:22 AM (IST) Dec 30
Suriyan Peyarchi Palangal in Tamil: ஜனவரி 2026 சூரிய பகவான் திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
10:19 AM (IST) Dec 30
School Holiday: 2026 ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு, பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளன. மொத்தமாக 31 நாட்களில் சுமார் 15 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
10:13 AM (IST) Dec 30
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.11 விலையில் ஒரு புதிய டேட்டா பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ வழங்கும் இந்த ப்ரீபெய்டு டேட்டா பிளானின் விலை வெறும் ரூ.11 மட்டுமே.
09:42 AM (IST) Dec 30
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ஆயிரக்கணக்கிலும், ஒரு கிலோ வெள்ளி விலை பல்லாயிரக்கணக்கிலும் குறைந்துள்ளது.
09:38 AM (IST) Dec 30
கெளரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை வழக்கில், அவர் சாகும் முன் எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கி உள்ளது. அதில் முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.
09:32 AM (IST) Dec 30
இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். அபராதத்தைத் தவிர்க்கவும், உயிரைப் பாதுகாக்கவும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.
09:09 AM (IST) Dec 30
இந்திய இரயில்வே வாரியம் (RRB), அமைச்சக மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் 311 காலியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை (CEN 08/2025) வெளியிட்டுள்ளது. ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், சட்ட உதவியாளர் போன்ற பதவிகளுக்கு 2025 டிசம்பர் 30 முதல் விண்ணப்பிக்கலாம்.
08:57 AM (IST) Dec 30
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது 'பே டே சேல்' சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை 2026 ஜனவரி 1 வரை முன்பதிவு செய்யக் கிடைப்பதுடன், மொபைல் ஆப் முன்பதிவுகளுக்கு வசதிக் கட்டணம் தள்ளுபடி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
08:54 AM (IST) Dec 30
தமிழகத்தில் அரசு பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதே முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், ஓட்டுநர்கள் செல்போன்களை நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
08:53 AM (IST) Dec 30
சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதியிடம் கடன் கேட்கும் ரோகிணிக்கு சாட்சி கையெழுத்து போட மறுத்துவிடுகிறார் மீனா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:17 AM (IST) Dec 30
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா, 80 வயதில் நீண்டகால நோய்க்குப் பிறகு காலமானார். அவரது மறைவால் பிஎன்பி பலவீனமடையுமா? அவரது அரசியல் பயணம், இந்தியாவுடனான உறவு மற்றும் பிஎன்பி-யில் அவரது பங்கு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.