- Home
- உடல்நலம்
- Black Cumin in Winter : குளிர்காலத்தில் கருப்புசீரகம் உண்பதால் இத்தனை நன்மைகளா? முழுநன்மைகள் பெற 'இப்படி' சாப்பிடுங்க!!
Black Cumin in Winter : குளிர்காலத்தில் கருப்புசீரகம் உண்பதால் இத்தனை நன்மைகளா? முழுநன்மைகள் பெற 'இப்படி' சாப்பிடுங்க!!
குளிர்காலத்தில் கருஞ்சீரகத்தை ஏன் சாப்பிட வேண்டும், அதனால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Black Cumin in Winter
குளிர்காலத்தில் உடல் செயல்பாடு குறையும். அதேசமயம் சூடான உணவுகள், வறுத்த உணவுகள் சாப்பிட ஆசையும் அதிகரிக்கும். அவற்றை சாப்பிட்டால் அறியாமலேயே எடை அதிகரிக்கும், உடலில் கொழுப்பும் குவியத் தொடங்கும். இதுபோன்ற சமயத்தில் கருஞ்சீரகம் ஒரு சிறந்த குளிர்கால சூப்பர்ஃபுட் ஆக செயல்படுகிறது. குளிர்காலத்தில் கருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் கருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் :
1. உடல் எடை கட்டுப்பாடு:
குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடலில் கொழுப்பு குவியத் தொடங்கும். இந்த பிரச்சினையை தவிர்க்க கருஞ்சீரகம் உதவும். ஏனெனில் கருஞ்சீரகம் உடலில் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.
2. இதய ஆரோக்கியம் :
குளிரால் இரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதனால் இதய நோயின் அபாயம் குறையும்.
3. வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் :
பொதுவாக குளிர்காலத்தில் செரிமானம் மெதுவாகும். இதை தவிர்க்க கருஞ்சீரகம் சாப்பிடலாம். ஏனெனில் இது வளர்சிதை மாற்ற செயல்முறையை துரிதப்படுத்தும், உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் உணவு விரைவாக ஜீரணிக்க உதவும்.
4. மூட்டு வலியை குறைக்கும் :
குளிர்காலத்தில் பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே காணப்படும். கருஞ்சீரகத்தில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் வீக்கத்தை குறைத்து மூட்டு வலியிலிருந்து நிவாரணம் வழங்கும்.
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :
குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். இதனால் பருவ கால தொற்று நோய்களிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
கருஞ்சீரகத்தை எப்படி சாப்பிடுவது?
கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடியாக்கி தினமும் காலை சூடான நீர் அல்லது தேனீர் கலந்து சாப்பிடலாம். இருப்பினும் எந்தவொரு புதிய முயற்சி செய்யும் முன் ஒரு முறை மருத்துவரை அணுகுவது நல்லது.

