மாலை 6 மணிக்கு பிறகு சாப்பிடும் சில உணவுகள் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

மாலை வேளையில் குறிப்பாக மழை குளிர் காலங்களில் பக்கோடா, சமோசா, வடை, பஜ்ஜி போன்ற ஏதாவது சாப்பிட வேண்டுமென்று ஆசையாக இருக்கும். இருப்பினும் மாலை 6 மணிக்கு பிறகு நாம் சாப்பிடும் சில உணவுகள் செரிமானத்தையும், வளர்ச்சியை மாற்றத்தையும் மோசமாக பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் உடலில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே எந்தெந்த உணவுகளை மாலை 6:00 மணிக்கு பிறகு சாப்பிடக்கூடாது? எதையெல்லாம் சாப்பிடலாம்? என்பது குறித்து இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மாலை 6 மணிக்கு பிறகு சாப்பிட கூடாதவைகள் :

- பக்கோடாக்கள், சமோசாக்கள், எண்ணெயில் வறுத்த உணவுகள்

- வெண்ணெய் அதிகம் உள்ள பாப்கான் மற்றும் பீட்சாக்கள்

- ஜிலேபி போன்ற அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள் தின்பண்டங்கள்

- பானி பூரி பேல் பூரி போன்ற தெரு உணவுகள்

இவற்றை சாப்பிட்டால் வரும் பிரச்சினைகள் :

மேலே சொல்லப்பட்டுள்ள இந்த உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயை நேரடியாக பாதிக்கும். இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீர்குளித்து விடும். இரவில் செரிமானத்தை மெதுவாக்கும். வாயு, வீக்கம், அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை குறைத்து வீக்கத்தை அதிகரிக்கும். உடலில் கெட்ட கொழுப்பை குவிக்கும்.

மாலையில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் :

- எண்ணெய் இல்லாமல் பொறித்த மக்கானா உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

- வேக வைத்த இனிப்பு சோளம் சாப்பிடலாம்.

- சூடான காய்கறி சூப் குடியுங்கள்.

- மசாலா கொண்டக்கடலை

- மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவில் வேக வைத்த மோமோக்கள் சாப்பிடலாம்.

நான் சாப்பிடும் உணவு தான் நம்முடைய ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் எனவே நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆறு மணிக்கு பிறகு மேலே சொன்ன உணவுகளை தவிர்ப்பதன் மூலம் எடை கட்டுக்குள் இருப்பது மட்டுமல்லாமல் இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.