மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திமுக கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த சதன் திருமலைக்குமார் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். காசோலை மோசடி வழக்கில் சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிதி நிறுவனத்தை ஏமாற்றிய மதிமுக எம்.எல்.ஏ

அதாவது சதன் திருமலைக்குமார் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக நியூ லிங் ஓவர்சீஸ் என்ற நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கடன் வாங்கியுள்ளார். பின்பு தான் பெற்ற தொகைகாக ரூ.1 கோடிக்கான காசோலையை நிதி நிறுவனத்திடம் வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. சதன் திருமலைக்குமார் போலி காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை

இதனைத் தொடர்ந்து நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனம் சதன் திருமலைக்குமார் மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மேலும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு 3 மாதங்களுக்குள் ரூ.1 கோடியை வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சதன் திருமலைக்குமாருக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.