mohanlal mother santhakumari passed away : நடிகர் மோகன் லாலின் அம்மா சாந்தகுமாரி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது மலையாள சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohanlal Mother Santhakumari Passed Away: மலையாள சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மோகன் லால். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார். சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் என்று சொல்லும் அளவிற்கு ஜில்லா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மலையாளத்திலும் இந்தப் படம் ஹிட் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் மோகன் லால் கடந்த 1960 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை விஸ்வநாதன் நாயர் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சாந்தகுமாரி. நீண்ட நாட்களாக நரம்பியல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தகுமாரி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 90. கொச்சியில் உள்ள எலமாக்க்ராவில் வசித்து வந்தார். இந்த நிலையில் தான் நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தகுமாரி இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அம்மாவின் இறப்பு மோகன் லாலை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் அம்மா உடன் இருக்கும் தனது சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து அம்மா என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அறுவை சிகிச்சை:

சாந்தகுமாரிக்கு உடலில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. மூளையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது கேரளாவிலுள்ள கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அதன் பிறகு ஒரு பக்கமாக கை கால்கள் இயங்காது நிலையில் இருந்திருக்கிறதே டாக்டர்கள் கண்டறிந்தனர் அதன் பிறகு நீண்ட நாட்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அதிகமான மருத்துவத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

என்னுடைய உயர்வுக்கு காரணமே என் தாய் தான்:

மோகன்லால் தனது சினிமா துறையிலும் மற்றும் பிக் பாஸ் கேரளா தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மிகவும் பிசியாக இருந்து வந்த நிலையில் கிடைக்கும் நேரங்களில் அவர் தாயாருடன் நேரத்தை கழித்து வந்தார். என் வாழ்விற்கு மிகப்பெரிய சப்போர்ட் என் அம்மா தான் என்றும் அவர் பல விழா மேடைகளில் கூறியிருக்கிறார். இந்த அளவிற்கு சினிமா துறையில் உயர்வதற்கு என் அம்மாவே உறுதுணையாக இருந்தார் என்றெல்லாம் உருக்கமாக கூறியிருப்பார்.

பிரபலங்கள் இரங்கல்:

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாந்தகுமாரியின் உடலானது கொச்சியில் உள்ள மோகன் லாலின் Thevara இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின்படி நாளை காலை அல்லது மாலைக்குள்ளாக சாந்தகுமாரியின் இறுதிச் சடங்கு அவர்களது குடும்ப வழக்கப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. கேரளா முதல்வர், நடிகர் மம்மூட்டி உள்ள பிரபலங்கள் சாந்தகுமாரியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று மோகன் லாலின் தாயார் சாந்தகுமாரி உயிரிழந்துள்ளார்.

View post on Instagram