makapa anand cheated in chennai petrol bunk : விஜய் டிவி தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தனது காருக்கு டீசல் போட சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்துள்ளார்.

தனது காருக்கு டீசல் போட சென்ற மாகாபா ஆனந்த் நடைபெற்ற பிரச்சனையால் அவருக்கு மூன்று லட்ச ரூபாய் நஷ்டம் ஆகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் தெளிவாக பார்க்கலாம். விஜய் டிவி தொகுப்பாளர்களில் பிரபலம் வாய்ந்த தொகுப்பாளர் என்றால் அது மாகாபா ஆனந்த். அவர் முன்னாள் ஆர் ஜேவாகவும் இருந்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் மட்டுமே தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு பல ரசிகர்களும் உள்ளனர். இவர் பேசும் பேச்சும் மற்றும் அவரது சூப்பர் சிங்கரில் ஆடும் நடனமும் மிகவும் பிரபலமானது. சின்னத்திரையில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தவர் மாகாபா ஆனந்த்.

ஆனால், சினிமாவில் மட்டும் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் தான் தனது காருக்கு டீசல் நிரப்ப சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்துள்ளார். அது என்னவென்றால், தனது சொகுசு காருக்கு சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பியுள்ளார். வண்டிக்கு டீசல் நிரப்பிய கொஞ்ச நேரத்திலேயே பாதியிலேயே கார் பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து காரை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு காரை சர்வீஸ் செய்ய செக் செய்த போது டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாகாபாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.

டீசலில் தண்ணீர் கலந்ததால் காரின் இன்ஜின் மட்டுமின்றி முக்கியமான பாகங்களும் பழுதடைந்துள்ளது. இன் ஜின் மற்றும் பழுதடைந்த பாகங்களை சரி செய்ய அவருக்கு ரூ.3 லட்சம் வரையில் செலவாகியுள்ளது. இதற்கெல்லாம் மாகாபா ஆனந்த் போதுமான ஆதாரங்களை சேகரித்து வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

View post on Instagram

அதற்கு பெட்ரோல் பங்க் நிர்வாகமோ எங்களால் ரூ.3 லட்சத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமென்றால் ரூ.80 ஆயிரம் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். இது தொடர்பாக மாகாபா ஆனந்த் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இச்சம்பவம் நடந்த ஒரு வாரம் ஆனதாக சொல்லப்படும் நிலையில் இப்போதுதான் மாகாபாவின் வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பங்க நிர்வாகத்தின் நலன் கருதி மாகாபா ஆனந்த தனது வீடியோவில் ஆடியோவை கட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.