Published : Jun 05, 2023, 07:00 AM ISTUpdated : Jun 06, 2023, 09:16 AM IST

Tamil News Live highlights: ”வெளிநாடு செல்வதால் முதலீடு வராது.. ஆளுநர் RNரவி பேச்சு

சுருக்கம்

Tamil News Live highlights வெளிநாடு செல்வதால் முதலீடு வராது என்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி.

Tamil News Live highlights: ”வெளிநாடு செல்வதால் முதலீடு வராது.. ஆளுநர் RNரவி பேச்சு

12:20 AM (IST) Jun 06

நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம்: சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானது !!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் குறித்து எழுந்த புகாரையடுத்து, தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

11:24 PM (IST) Jun 05

“வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது..” முதல்வர் மு.க ஸ்டாலினை தாக்கி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

10:29 PM (IST) Jun 05

சூப்பர்.! இந்தியாவில் உருவாகும் போர் விமான இயந்திரங்கள் - பிரதமர் மோடியின் அசத்தல் திட்டம்

இந்தியாவில் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) போர் விமான இயந்திரங்களைத் தயாரிப்பது குறித்த ஒப்பந்தம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

10:25 PM (IST) Jun 05

நாட்டையே உலுக்கிய மோசமான ரயில் விபத்து : எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ரயில்வே போலீஸ்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக பாலசோர் அரசு ரயில்வே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது

10:03 PM (IST) Jun 05

மெரினாவில் ஜோடியிடம் அத்துமீறிய போதை கும்பல்.. தனியாளாக விரட்டி அடித்த பெண் காவலர் - பொதுமக்கள் பாராட்டு

சென்னையில் போதைக்கு அடிமையான நான்கு பேரிடம் சண்டை போட்டு தம்பதியை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

10:02 PM (IST) Jun 05

"2050ல் வரும் என்று எதிர்பார்த்தது இப்போதே வந்துவிட்டது" அது என்ன WetBulb Temparature? இது ஏன் ஆபத்தானது?

 

09:28 PM (IST) Jun 05

தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறை திட்டம்.. அமைச்சர் ரகுபதி அறிமுகம்

சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறை திட்டத்தை சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிமுகப்படுத்தி வைத்தார்.

08:30 PM (IST) Jun 05

ஒடிசா விபத்துக்கு பிறகு ஸ்டேஷன் மாஸ்டர் முகமது ஷாரிஃப் தலைமறைவா? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன?

நாட்டின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் ஒடிசா ரயில் விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

08:24 PM (IST) Jun 05

ஒரே நாளில் 75 பாலிசி வித்துட்டு வா.. கடுப்பான ஹெச்டிஎஃப்சி மேனேஜர் - சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ

ஹெச்டிஎஃப்சி மேனேஜர் ஒருவர் தனது கீழ் வேலை செய்யும் ஊழியர்களை திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

07:46 PM (IST) Jun 05

24 மணி நேரமும் மது விற்பனை.. மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா? அன்புமணி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் நண்பகல் 12. 00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 10 மணி நேரம் மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அனைத்து மதுக்கடைகளிலும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

07:22 PM (IST) Jun 05

WWDC 2023: Apple WWDC 2023 நிகழ்ச்சியில் வெளியாகும் iOS 17.. எப்போது டவுன்லோட் செய்ய முடியும்?

ஆப்பிளின் WWDC நிகழ்ச்சிக்கு பிறகு iOS 17 டெவலப்பர் பீட்டாவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

07:07 PM (IST) Jun 05

காஷ்மீரில் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ள காட்டுப் பன்றிகள்..

காட்டுப்பன்றிகள் உரி எல்லை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

06:36 PM (IST) Jun 05

“பசுமை சிக்கபள்ளாபூர்” திட்டம் மூலம் 2023ம் ஆண்டில் 10,000 மரக்கன்றுகளை நடும் ஈஷா

பசுமை சிக்கபள்ளாப்பூர் மரம் நடும் முயற்சியின் ஒரு பகுதியாக சத்குரு சந்நிதியில் ஆதியோகி அருகில் மரக்கன்றுகளை நட்டார் சிக்கபள்ளாப்பூர் எம்.எல்.ஏ ஸ்ரீ பிரதீப் ஈஸ்வர்.

05:33 PM (IST) Jun 05

தாவர விதை.. டிஎன்ஏ பரிசோதனை.. எலான் மஸ்க்கின் SpaceX விண்வெளி நிலையத்தில் இதெல்லாம் நடக்குது தெரியுமா.!

ஃபால்கன்-9 ராக்கெட்டில் உள்ள டிராகன் விண்கலம் பணியாளர்களுக்கு புதிய உணவுப் பொருட்களை மட்டுமல்ல, அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான கருவிகளையும் எடுத்துச் செல்கிறது.

05:01 PM (IST) Jun 05

ரூ.15 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய டாப் 5 குறைந்த விலை மின்சார கார்கள் - முழு விபரம்

2023 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் முதல் 5 மின்சார கார்களின் பட்டியலை பார்க்கலாம்.

04:07 PM (IST) Jun 05

வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

04:01 PM (IST) Jun 05

சென்னையில் சட்டென்று மாறிய வானிலை.. கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி..

சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

03:03 PM (IST) Jun 05

நாட்டிலேயே சென்னை ஐஐடி தான் பெஸ்ட்! 5-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தல்! முழுவிவரம் இதோ..

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 5-வது முறையாக ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.

02:34 PM (IST) Jun 05

போராட்டத்தை வாபஸ் பெறவில்லை - சாக்‌ஷி மாலிக்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர் மல்யுத்த வீரர் சாக்க்ஷி மாலிக் போராட்டம் வாபஸ் பெற்று ரயில்வேயில் தனது பணியினை மீண்டும் துவங்கியதாக தகவல் பரவி வந்த நிலையில், அதனை அவரே திட்டவட்டமாக மறுத்துள்ள

02:06 PM (IST) Jun 05

அபிஷேக் பானர்ஜி மனைவி துபாய் செல்ல தடை

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது துபாய் பயணம் மறுக்கப்பட்டுள்ளது

01:15 PM (IST) Jun 05

மதுவால் உயிர்பலி: திறனில்லாத திமுக அரசு - அண்ணாமலை காட்டம்!

மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

12:33 PM (IST) Jun 05

ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்?

தமிழகத்தின் தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய பொறுப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் யாரை நியமிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

12:32 PM (IST) Jun 05

ராகுல் காந்தியை விளாசும் நெட்டிசன்கள்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு நெட்டிசன்கள் எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர்

12:28 PM (IST) Jun 05

மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக நடித்த நடிகர் குஃபி பெயின்டல் காலமானார்

'மகாபாரதம்' தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. 

12:27 PM (IST) Jun 05

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது.. ராமதாஸ் திடீர் எதிர்ப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளனர்.  அவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்பது தான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடும் ஆகும். 

ராமதாஸ்

 

11:31 AM (IST) Jun 05

முதல்வருடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் சந்திப்பு

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்வுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

11:16 AM (IST) Jun 05

டிரக் மீது மோதி அப்பளம் போல் நொருங்கிய கார்... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி

மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10:22 AM (IST) Jun 05

யாஷிகா உடன் லாங் டிரைவ் சென்ற போட்டோவை பதிவிட்ட அஜித் மச்சினன்... மாமாகுட்டி என கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகா ஆனந்த் உடன் லாங் டிரைவ் சென்றபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

10:09 AM (IST) Jun 05

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகிறதா?

தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ள நிலையில், பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

10:06 AM (IST) Jun 05

Today Gold Rate in Chennai : மக்களே! சரசரவென குறைந்த தங்கம் விலை! எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் விலை

 

09:27 AM (IST) Jun 05

51 மணிநேரத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கம்

ஒடிசா மாநிலம் பாலசோரில் விபத்து நடந்த இடத்தில் உள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அந்தப் பகுதியில் ரயில் இயக்கம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று நடந்த 51 மணிநேரத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

275 பேர் உயிரிழப்பு; அசுர கதியில் வேலை; மீண்டும் ரயில்கள் இயக்கம்; மனம் உருகிய அமைச்சர்!!

09:21 AM (IST) Jun 05

பைக்கில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

சென்னையில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் போக்சோவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொந்தரவு

09:11 AM (IST) Jun 05

கல்யாணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் உறவு... கேக்கும்போதே கூசுது - சம்யுக்தாவை சரமாரியாக சாடிய விஷ்ணுகாந்த்

சீரியல் நடிகை சம்யுக்தா தன் மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் விஷ்ணுகாந்த் சமூக வலைதளம் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.

09:03 AM (IST) Jun 05

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதல்.. 3 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

பெரம்பலூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஆம்புலன்ஸ்

 

08:43 AM (IST) Jun 05

அட்ராசக்க... ஐபிஎல் டீமின் பெயரை ‘தளபதி 68’ படத்திற்கு டைட்டிலாக வைத்த வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தின் தலைப்பு என்ன என்ப்து குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

07:55 AM (IST) Jun 05

மாரடைப்பால் உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்! அலறிய பயணிகள்! 62 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்.!

அருப்புக்கோட்டை அருகே  அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்து 62 பயணிகளின் உயிரை நடத்துனர் காப்பாற்றியுள்ளார். 

மாரடைப்பு

 

07:03 AM (IST) Jun 05

அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்ணுபிரியா.. ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? கொதிக்கும் ஷியாம் கிருஷ்ணசாமி.!

அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்ணுபிரியாவும்… ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திரந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள்.  ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷியாம் கிருஷ்ணசாமி


More Trending News