யாஷிகா உடன் லாங் டிரைவ் சென்ற போட்டோவை பதிவிட்ட அஜித் மச்சினன்... மாமாகுட்டி என கலாய்க்கும் நெட்டிசன்கள்
நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகா ஆனந்த் உடன் லாங் டிரைவ் சென்றபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா. இப்படத்தில் ஸ்விம்மிங் டீச்சராக நடித்திருப்பார் யாஷிகா. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகாவுக்கு, திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான். இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார் யாஷிகா.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் யாஷிகா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா, காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அந்நிகழ்ச்சியில், தன்னுடைய சக போட்டியாளரான மகத்தை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மகத் ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக கூறியும் அவரை உருகி உருகி காதலித்து வந்தார் யாஷிகா. அந்த காதல் பிக்பாஸ் வீட்டிலேயே முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் யாஷிகா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா, காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அந்நிகழ்ச்சியில், தன்னுடைய சக போட்டியாளரான மகத்தை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மகத் ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக கூறியும் அவரை உருகி உருகி காதலித்து வந்தார் யாஷிகா. அந்த காதல் பிக்பாஸ் வீட்டிலேயே முடிவுக்கு வந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை யாஷிகா சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். நோட்டா, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி, கடமையை செய் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் உறவு... கேக்கும்போதே கூசுது - சம்யுக்தாவை சரமாரியாக சாடிய விஷ்ணுகாந்த்
மகத் உடனான காதல் முறிவுக்கு பின்னர் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான நிரூப்பை காதலித்து வந்துள்ளார் யாஷிகா. ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நிரூப்பை சர்ப்ரைஸாக பார்க்க வந்த யாஷிகா, தங்களது காதல் முறிவு குறித்து உருக்கமாக பேசி இருந்தார். இரண்டு காதல் தோல்வியை சந்தித்த யாஷிகா, தற்போது மூன்றாவது காதலில் பிசியாக உள்ளார்.
நடிகை ஷாலினியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மச்சினனுமான நடிகர் ரிச்சர்ட் ரிஷியை தான் நடிகை யாஷிகா தற்போது காதலித்து வருகிறாராம். கடந்த சில வாரங்களாக இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்கள் படு வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது யாஷிகா உடன் காரில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரிச்சர்ட் ரிஷி, லாங் டிரைவ் போவதாக குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரிச்சர்ட் ரிஷியை மாமாகுட்டி என கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... ஐபிஎல் டீமின் பெயரை ‘தளபதி 68’ படத்திற்கு டைட்டிலாக வைத்த வெங்கட் பிரபு..!