மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக நடித்த நடிகர் குஃபி பெயின்டல் காலமானார்
'மகாபாரதம்' தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78.
'மகாபாரதம்' தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் இன்று காலமானார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஃபி பெயின்டலின் மருமகன் ஹிட்டன் பெயின்டல் அவரது மறைவுச் செய்தியை உறுதி செய்தார். நடிகர் குஃபி பெயின்டலுக்கு தற்போது வயது 78.
சில காலமாக இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுடன் போராடி வந்த குஃபி பெயின்டல் 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் மீண்டு வந்துவிடுவார் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... டிரக் மீது மோதி அப்பளம் போல் நொருங்கிய கார்... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
ஆனால் துரதிர்ஷ்டவசமாமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9:00 மணியளவில் நடிகர் குஃபி பெயின்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஃபி பெயின்டலின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஃபி பெயின்டலின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ஜாதி பார்க்காமல் காதல்... பாதியில் நின்றுபோன திருமணம் - அஜித் மச்சானுக்கு இப்படி ஒரு சோகமான காதல் கதை இருக்கா!