ஜாதி பார்க்காமல் காதல்... பாதியில் நின்றுபோன திருமணம் - அஜித் மச்சானுக்கு இப்படி ஒரு சோகமான காதல் கதை இருக்கா!
நடிகர் அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ரிஷியின் முதல் காதல் திருமணம், நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுபோனது ஏன் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தான் அவரது சகோதரி ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோரும் சிறுவயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ளனர். ஷாலினியின் தங்கை ஷாமிலி ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு விலகிவிட்டார். ஆனால் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கதிர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் திரைப்படம் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ரிச்சர்ட் ரிஷி, தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் திரெளபதி. மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
திரெளபதி படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் மோகன் ஜி உடன் கூட்டணி அமைத்த ரிச்சர்ட் ரிஷி ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அடுத்த படத்திற்காக தயாராகி வரும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி, கடந்த சில வாரங்களாக நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
இதையும் படியுங்கள்... யாஷிகா உடன் லாங் டிரைவ் சென்ற போட்டோவை பதிவிட்ட அஜித் மச்சினன்... மாமாகுட்டி என கலாய்க்கும் நெட்டிசன்கள்
நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு தற்போது 45 வயதாகிறது. இருப்பினும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு முதல் காதல் திருமணம் வரை சென்று நின்றுள்ளது. அந்த காதல் திருமணம் பாதியில் நின்றதால் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்து வருகிறாராம் ரிச்சர்ட் ரிஷி. அந்த முதல் காதல் பற்றி தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவரான கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமி உடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார் ரிச்சர்ட். அந்த பெண்ணின் தந்தையும், நடிகர் ரிச்சர்ட்டின் தந்தையும் குடும்ப நண்பர்களாம். அதனால் ஜாதி, மதம் எல்லாம் பார்க்காத அவர்கள் இவர்களது திருமணத்துக்கு கிரீன் சிக்னல் காட்ட, திருமண வேலைகளும் தடபுடலாக நடந்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ரிச்சர்ட் ரிஷிக்கும், சத்யலட்சுமிக்கு திருமணம் நிச்சயமானது. இவர்களது நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் அஜித் தான் இந்த நிச்சயதார்த்தத்தை முன் நின்று நடத்தி வைத்தார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பின் இந்த காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் இவர்களது திருமணமும் நடக்காமல் போனது. இதையடுத்து திருமணமே செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த ரிச்சர்ட் ரிஷி, தற்போது யாஷிகாவுடன் டேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டிரக் மீது மோதி அப்பளம் போல் நொருங்கிய கார்... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி