நாட்டிலேயே சென்னை ஐஐடி தான் பெஸ்ட்! 5-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தல்! முழுவிவரம் இதோ..

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 5-வது முறையாக ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.

NIRF Ranking : List of India's best educational institutes.. IIT Madras tops the list for the 5th time!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆர்எஃப்) எட்டாவது பதிப்பை மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று வெளியிட்டார். அதன்படி ஐஐடி மெட்ராஸ் இந்த ஆண்டும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) பெங்களூரு மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.டெல்லி பல்கலைக்கழகத்தின் (டியு) மிராண்டா ஹவுஸ் கல்லூரி தொடர்ந்து 7-வது முறையாக சிறந்த கல்லூரியாக உருவெடுத்துள்ளது. 

ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐடி காரக்பூர், ஐஐடி ரூர்க்கி மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகியவை ஒட்டுமொத்த பிரிவில் முதல் 10 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. மேலும் இந்த பட்டியலில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) 6-வது இடத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) 10வது இடத்தைப் பிடித்துள்ளன.

TNPSC : குட் நியூஸ் வந்தாச்சு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

நிறுவனங்கள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை, பல் மருத்துவம், ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் புதுமை என 13 வகைகளின் கீழ் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் உணர்தல் உள்ளிட்ட அளவுருக்களின் அடிப்படையில் மதீப்பிடு செய்யப்பட்டன. மேலும்  விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகள் இந்த ஆண்டு முதல் முறையாக இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகப் பிரிவின் கீழ், ஐஐஎஸ்சி பெங்களூரு முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து ஜேஎன்யு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யு) ஆகியவை உள்ளன. இந்துக் கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி (சென்னை), பிஎஸ்ஜி மகளிர் கல்லூரி (கோயம்புத்தூர்), செயின்ட் சேவியர்ஸ் (கொல்கத்தா), ஆத்மா ராம் சனாதன் கல்லூரி (டெல்லி), லயோலா கல்லூரி (சென்னை) ஆகியவை முதல் தரவரிசைப் பெற்ற கல்லூரிகளாகும். கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த சென்னை லயோலா கல்லூரி இந்த ஆண்டு 7-வது இடத்திற்கு சரிந்தது.

பொறியியல் பிரிவின் கீழ் முதல் 8 இடங்களை ஐஐடி-க்களே பெற்றுள்ளன. ஐஐடி-மெட்ராஸ் அந்த வகையில் சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி காரக்பூர், ஐஐடி குவஹாத்தி மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஆகியவை உள்ளன. திருச்சியில் உள்ள என்.ஐ.டி கல்வி நிறுவனம் 9-வது இடத்திலும்,  ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் 10வது இடத்திலும் உள்ளன.

ஐஐடி ரூர்க்கி 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐஐடி காரக்பூர் கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல் 10 பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளது.

மேலாண்மை பிரிவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) அகமதாபாத் முதலிடத்தையும், ஐஐஎம் பெங்களூரு மற்றும் ஐஐஎம் கோழிக்கோடு இரண்டையும் பிடித்தன. ஐஐஎம் கோழிக்கோடு கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-பாம்பே ஆகியவை மேலாண்மை பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவப் பிரிவில் முதலிடத்தையும், பெங்களூருவின் தேசிய சட்டப் பள்ளி இந்தியப் பல்கலைக்கழகம் சட்டப் பிரிவில் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து தேசிய சட்டப் பள்ளி (டெல்லி) 2-வது இடத்தையும் பிடித்தது. ஆராய்ச்சியில், ஐஐஎஸ்சி பெங்களூரு மீண்டும் சிறந்த நிறுவனமாக உருவெடுத்தது, அதைத் தொடர்ந்து ஐஐடி-மெட்ராஸ் மற்றும் ஐஐடி-டெல்லி. இந்த வகையில் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் 7-வது இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

வங்கி வேலை வேண்டுமா? 8812 காலிப் பணியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios