திருச்செந்தூரில் இருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 62 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பேருந்தை மதுரையை சேர்ந்த ஓட்டுநர் முருகேஸ்ராஜா(53) இயக்கினார்.
அருப்புக்கோட்டை அருகே அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்து 62 பயணிகளின் உயிரை நடத்துனர் காப்பாற்றியுள்ளார்.
திருச்செந்தூரில் இருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று 62 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பேருந்தை மதுரையை சேர்ந்த ஓட்டுநர் முருகேஸ்ராஜா(53) இயக்கினார். பேருந்து அருப்புக்கோட்டை தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, முருகேஸ்ராஜாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம் - 11 மாவட்டங்களில் கனமழை.!!

இதனையடுத்து, பேருந்து வேகத்தை குறைத்து சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள் இருக்கையிலேயே ஓட்டுநர் மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து, நடத்துனர் திருப்பதி வேகமாக வந்து சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இதையும் படிங்க;- சென்னை வழியாக செல்லும் 16 ரயில்கள் ரத்து - எவையெல்லாம் தெரியுமா?

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஓட்டுநர் முருகேஸ்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறிந்து பந்தல்குடி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்துனரின் சாமர்த்தியத்தால் 62 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
